உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புன்னகை புரிவது இன்றிப் எடுப்பும் இன்னிசை பாடும் அருவிகளும் சேர்ந்து கோடைக்கானல் மலை. இது ஈடும் பெருமிதத்தோடு நிமிர்ந்து நிற்கிறது. வரலாற்றுச் சிறப்பும் சங்க இலக்கியத் தொடர்பும் உடைய இந்த மலை முன்னாளில் பகைவரைக் கண்டு அஞ்சியவர்க்குப் புகலிடமாய்த் திகழ்ந்தது. இந்நாளில் பூந்தென்றலால் சாமரம்வீசி முதுவேனிலில் ஞாயிற்றின் வெம்மைக்கு அஞ்சினோர் புகலிடமாய், அவர்தம் உள்ளங்களில் களிப்பூட்டும் கவின் நகரமாய், அவர்களுடைய உடற்சோர்வை நீக்கும் வேனில் விடுதியாய், இன்பப் பொழுதுபோக்க விழைபவர் களின் அழகு நகராய் ஏற்றம் பெற்றிருக்கிறது. இதற்கு ஏற்ப, கோடை விழா அரசின் ஆதரவில் கொண்டாடப்படுகிறது. பழனிமலை, பழனித் தலத்தால் தமிழ்நாட்டிலும் கேரளத் திலும் நன்கு தெரிந்த பெயராக இருந்து வருகிறது. இங்கு போகர் என்ற ஓர் இராஜரிஷி வாழ்ந்ததாக ஐதீகம். மருத்துவம் தூதுக்கலை,இராஜதந்திரம் ஐக்கிய நாடுகள் அவை ஆகியவற்றைப் பற்றி எல்லாம் அவர் அறிந்திருந்தார் என்றும், கணிதநூல் வல்லோராய் விளங்கினார் என்றும் இந்நூற்றாண்டின் தொடக்கத் தில் புகழுடன் திகழ்ந்த கணிதமேதை இராமாநுஜம் போன்று எண்கள் அல்லது இலக்கங்களில் பெருத்த ஈடுபாடு கொண்டிருந்தார். என்று ம் கூறுவர். ஐரோப்பிய இனத்தின் முன்னோர் இவரே என்றும், தண்டாயுதபாணிக்குப் பழனிமலையில் கோயில் படைத்தவர் இவரே என்றும் பல நாடுகளுடன் தொடர்புடைய தக்கார் இந்நூலாசிரியரிடம் கூறியுள்ளனர். கீழ்ப் பழனிமலை என்பது 3,000 அடி முதல் 5,000 அடி வரை உயரமானது. இதில் தாண்டிக்குடி மலை, விருபாட்சி மலை, வருஷநாட்டு மலை போன்ற மலைகள் உள்ளன. இவைபற்றி வட்டவாரியாக இந்நூலின் பிற்பகுதியில் விவரமாகக் கூறுவோம். மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஏற்கெனவே நாம் குறிப்பிட்ட அழகர்மலை தவிர நத்தம் மலை, கரந்த மலை, சிறுமலை முதலியன உள்ளன. நத்தம் மலையின் தொடர்ச்சியே பறம்பு மலை. இது இராமநாதபுர மாவட்டத்தில் உள்ளது. கொட்டாம்பட்டிக்கும் மேலூருக்கும் இடையே கருங்காலக்குடிப் பகுதியில் அமைந்த மலைகளின் கற்கள், கோயில் கட்டவும் விக்கிரக வேலைப்பாட்டுக்கும் ஏற்றவை.