உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வனப்பும் எழிலும் நிறைந்த சிறுமலை இன்று வாழைப் பழத்தால் புகழ்பெற்று கோடைநாளில் ஒரு குடையாக இருக் கிறது. 'தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் என்று மதுரைக்குச் செல்லும் வழிக்குறிப்பில் சிறுமலையைச் சிலப்பதிகாரம் சிறப்பிக்கிறது. சுருளிமலை என்னும் வளமான மலையும் மதுரை மாவட்டத் தில் அமைந்திருக்கிறது. பண்டாரத் துறையோரம் பருமரத்துக் காட்டோரம் நிக்கிறாராம் சுருளியாண்டி நீலமுழி வாடாமே மலையை மலைபொருதி மண்டபத்தை யுண்டுபண்ணி சிலையா முளைச்சாராம் செல்வமுள்ள சுருளியாண்டி பச்சை வனத்தழகும் பண்டாரத் துறையழகும் மேல்மெத்தைக் குகையழகும் மேலவர்கொண் டாடலாகும் இஞ்சி படருமலை ஏலக்காய் காய்க்குமலை மஞ்சி படருமலை மகத்தான சுருளிமலை சுருளி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மேலேயிருந்து கோயிலுக்குள்ளே விழும் நீர்த்துளிகள் உண்டு பண்ணும் 'Stallamite & Stallatite' வழியில் கிடக்கும் இலைகளும் தழைகளும் கல்லாக மாறியுள்ளன. முல்லை முல்லை நிலத்துக்கு மேற்கோளாக மதுரை மாவட்டத்தில் கோடைக்கானல் பழனி முதலிய வட்டங்களில் வளமான வனங்கள் உள்ளன. அமெரிக்க டாலர் முதலிய வெளிநாட்டு நாணயங்களை ஈட்டித்தரும் காடுகள் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் மட்டும் உள. தோல் தொழிலில் பயன்படும் வாட்டில் பட்டை 1883-இல் பழனிமலைக் காடுகளில் பூம்பாறையில் முதல் தடவையாகப் பயிரிடப்பட்டது. மிகப் பெரிய அளவில் இது இப்போது