உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 உயர்நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் நிறுவலாம் என்னும் கருத்தும் நிலவுகிறது. இந்திய அரசின் பல்வேறு அலுவலகங்களும் மதுரை மாநகரில் இயங்கி வருகின்றன. அவற்றுள் சில: மத்திய காவல் துறை உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை வருமான வரித் துறை அஞ்சல் துறை தொலைபேசித் துறை இரயில்வேத் துறை (கோட்ட அலுவலகம்) தேசிய சேமிப்புத் துறை தொழிலாளர் நலப் பாதுகாப்புத் துறை கள்ளக்கடத்தல், வரி ஏய்ப்பு - தடுப்புத் துறை பிரசாரத் துறை தொழிலாளர் நலம் பேணும் துறை திட்டக்குழுவின் மதிப்பீட்டு அலுவலகம் தொழிலாளர் கல்வித் துறை ஜவுளிக் கழகம் - ஆய்வு அலுவலகம் உள்ள இம் மாநகர், மாநில அரசுகளின் தலைநகராக சண்டிகர் (பஞ்சாப்), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), ஷில்லாங் (அசாம்) சிம்லா (இமாசலப் பிரதேசம்), திருவனந்தபுரம் (கேரளம்)' புவனேசுவர் (ஒரிசா) ஆகியவற்றைவிடப் பெரிய நகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடும் மொழியும் நாட்டுணர்ச்சி இம் மாவட்டத்தில் பல்கிப் பெருகியிருக் கிறது. அதைத் தனிக் கட்டுரையில் தெரிவிப்போம். மொழி வளர்ச்சியிலும் மதுரை பெரும்பணி புரிந்திருக்கிறது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமையுடையது மதுரை. எல்லைகள் மாவட்டங்கள், வடக்கே கோவை - திருச்சி கிழக்கே புதுக்கோட்டை இராமநாதபுர மாவட்டங்கள், தெற்கே திருநெல்வேலி மாவட்டம், மேற்கே கேரள மாநிலம் ஆகியவை மதுரை மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. 1910-க்குப் பி இறகு இம்மாவட்டத்தின் அமைப்பிலோ எல்லையிலோ எவ்வித மாறுதலும் ஏற்படவில்லை. . +