உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மாணிக்கவாசகர் காலம் இரண்டாவது வரகுணபாண்டியன் காலம் என்பர். பிற்காலப் பாண்டியர் 13-ஆம் நூற்றாண்டில் பாண்டியர் பாண்டியர் மீண்டும் மீண்டும் பேரரசர் ஆயினர். முதல் சடையவர்மன் குலசேகர பாண்டியன், முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன், இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன். முதல் மாறவர்மன் குலசேகரபாண்டியன் என்பவர் புகழ்மிக்கவர், இப் பாண்டியர்கள் சேரசோழரை வென்றனர். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் பாண்டி நாடு மிகவும் விரிவடைந்தது. இவன் பல போர்களில் வாகைசூடினான்; சோழர்களையும் ஹொய்சாளரையும் அடக்கினான்; நெல்லூர், கடப்பை மாவட்டங்களையும், இலங்கையையும் கேரளத்தையும் அடிமைப்படுத்தினான். தில்லைக் கூத்தப்பெருமான் கோயிலையும் திருவரங்கம் பெரிய கோயிலையும் இவன் புதுப்பித்துப் பொன்வேய்ந்தான். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி. 1268- 1311)காலத்தில் இத்தாலியிலிருந்து மார்க்கோபோலோ பாண்டிய நாட்டில் பல நகரங்களைப் பார்வையிட்டான். "அங்கு குலசேகர பாண்டியன் ஆட்சி நடந்தது. அவன் நாட்டை நடுவு நிலைமையுடன் ஆண்டுவந்தான், வாணிகம் செய்வோரிடத்தும் பிறநாட்டு மக்களிடத்தும் அவன் பேரன்புடன் நடந்து வந்தான்" என்று மார்க்கோபோலோ தன் நூலில் குறித்துள்ளான். இக்காலத்தோடு பாண்டியர் பேரரசு மறைந்தது. மாலிக் காபூர் 14ஆம் நூற்றாண்டில் மதுரைச்சீமை இஸ்லாமியர் ஆட்சி யில் ஏறத்தாழ 50 ஆண்டுகள் இருந்தது. மீனாட்சி கோயிலும் அடைபட்டுக் கிடந்தது. மாலிக்காபூர் என்பவன் வடக்கேயிருந்து 1310-இல் படையெடுத்ததன் விளைவே இஸ்லாமிய ஆட்சி. இஸ்லாமிய ஆட்சியில் மதுரை நகரில் பல மசூதிகள் ஏற் பட்டன. (1) நன்மை தருவார் கோயில் சந்நிதி எதிரே ஒரு மசூதி, (2) காமாத் தெரு மசூதி (கூடல் அழகப் பெருமாள் .