உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் அருகே), (3) பிரசித்திபெற்ற கான்சாகிப் கமாந்தான் சாயபு (முகமது யூசுப்) நினைவாகக் காளவாசல் அருகே இருக்கும் மசூதி, (4) கோரிப்பாளையம் மசூதி. - மீனாட்சியம்மன் கோயிலுக்குள், யானை கட்டுமிடத்திற்கு எதிரே, தெற்கு ஆடிவீதி - கிழக்கு ஆடிவீதிச் சந்திப்பில் ஒரு மசூதி புதிதாக ஏற்பட்டது. பிற்காலத்தில் இது அகற்றப்பட்டது. மருது சகோதரர்கள் அந்த இடத்தில் ஒரு பிள்ளையார் கோயிலை நிறுவினர் என்றும், அவர்களுக்குப் பிறகு அங்கு (இப்போதுள்ள) புறக்காவல் நிலையம் இருந்து வருவதாகவும் தெரிகிறது. விஜயநகர ஆட்சி தென்னிந்தியாவில் இஸ்லாமியர் படையெடுப்பின் எதிரொலியாக இந்துக்களுடைய பெருமையை நிலைநாட்ட விஜயநகர அரசு ஏற்பட்டது. இந்தப் இந்தப் பேரரசைச் சேர்ந்த கம்பண்ண உடையார் மதுரையை இஸ்லாமிய ஆட்சியிலிருந்து விடுவித்தார். மூடிக்கிடந்த கோயில் சந்நிதி திறந்தது. கோயில் மாநகரான மதுரை மீண்டும் பொலிவுபெற்றது. மீண்டும் பாண்டியர் ஆட்சி தொடர்ந்து பாண்டிய நாட்டில் குழப்பமாக இருந்தது. ச் சூழ்நிலையில் 1314 முதல் 1359 வரை ஆண்ட பாண்டியர்கள் தங்கள நலங்கருதியே விஜயநகரப்பேரரசுக்கு உட்பட்டவர்களாக நடந்து கொண்டார்கள். பிறகு விஜயநகரின் பிரதிநிதிகளாக நாயக்க அரசர்கள் நேரடியாக ஆளத் தொடங்கியது இரண்டாம் ஹரிஹரர் ஆட்சியில், அதாவது 14-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இம்மன்னன் மதுரையில் ஓர் ஆளுநரை நியமித்து, இப்பகுதியை ஆட்சிபுரியச் செய்தான். இதுபோலத் தஞ்சாவூா, செஞ்சி வேலூர் ஆகிய தமிழ்நாட்டு நகரங்களிலும் விஜயநகரப்பேரரசின் ஆளுநர்கள் நியமிக்கப்பெற்றனர். நாகம நாயக்கர் விஜயநகரப் ་ பேரரசுக்கு ஏற்றம் தந்த அரசர் கிருஷ்ணதேவராயர். ஏற்கெனவே, பல பொறுப்பான பதவிகளை வகித்து அனுபவம்பெற்ற நாகம நாயக்கரை மதுரையில் தம் பிரதிநிதியாய் - மண்டலேஸ்வரராய் - நியமித்தார். நாகமநாயக்கரைத் கிருஷ்ணதேவராயர் தொடர்ந்து அவர் மகன்