உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 நாயக்கர் ஆட்சி, முஸ்லிம்களுக்கு உட்பட்டு இயங்க வேண்டிய தாயிற்று. மசூதிகளுக்கு நிலமானியம் வழங்கி மீனாட்சி நாயக்கன் தன் பதவியைக் காப்பாற்றிக் கொண்டான். முஸ்லிம் ஆட்சி கி.பி.1734-இல் மதுரை மாநகர் முகமதலியின் கையில் இருந்தது. சில ஆண்டுகள் சென்றபின் ஆலம்கான் மதுரையைப் பிடித்துக் கொண்டான். முகமது யூசுப்கான் என்ற கான்சாகிப் கும்மந்தான் (1756 - 1764) மதுரையின் வரலாற்றில் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் குறிப்பிடத்தக்கவன் கான்சாகிப் கும்மந்தான். என்பதாகும். இவனுடைய இயற்பெயர், கான்சாகிபு பண்ணையூரில் பிறந்த இவன், ஓர் ஆங்கிலேயத் தளபதியிடம் வேலைக்குச் சேர்ந்தான். அப்போது ஆங்கிலம் கற்று, பின்னர் ஆர்க்காட்டு நவாபின் படையில் சேர்ந்து, படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று, படைத் தலைவனாக 'கமாண்டர்' ஆனான். இந்தப் பதவிப்பெயரை நாட்டுப்பாடல்கள் கமாந்தான், கும்மாந்தன், கும்தான் என்றெல்லாம் சிதைத்துக் கூறுகின்றன. கும்மந்தான் கான்சாகிபை, பிரிட்டிஷார் தங்கள் சேவகத்தில் அமர்த்திக் கொண்டனர் டச்சுக்காரர் பிரெஞ்சுக்காரர் ஆகியோர்க்கு எதிராகப் பிரிட்டிஷார் பறங்கிப்பேட்டையிலும் பிற ஊர்களிலும் போர் நடத்தி, இவன் துணையுடன் வெற்றி பெற்றனர். பறங்கிப் பெண் ஒருத்தியை இவன் மணந்து கொண்டான். கான்சாகிப் கும்மந்தானின் ஆற்றலை உணர்ந்த ஆர்க்காட்டு நவாபு முகமது அலி இவனைத் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி, தனக்கு வரவேண்டிய கப்பங்களை வசூலிக்க சுபேதாராக நியமித்தான். ஆனால் இவன் நவாபின் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த பாளையக்காரர்களோடு பகைமை கொண்டு அவற்றைத் தானே கைப்பற்ற முயன்றான். டச்சுக்காரர் உதவியோடு, போர்க்கருவிகளை உற்பத்தி செய்வதிலும் கான்சாகிபு ஈடுபட்ட தாகவும் குற்றம் சாட்டப்பட்டது.