உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 எல்லாக் கட்சிகளும் உணர்ந்து போட்டாபோட்டி மனப்பான்மை யுடன் கூட்டங்களும் மாநாடுகளு ம் கூட்டுகின்றன. இன்று மதுரையில் நடப்பது நாளை தமிழ்நாட்டில் நடக்கும் என்பது அரசியல் தலைவர்களின் கருத்து. றது. சுதந்தர இந்தியாவில் மதுரை ஒரு மாநகர நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது ஒரு பல்கலைக்கழக நகராகவும் மிளிரு சுற்றுலா நகராகவும் இதை அரசினர் ஏற்றுள்ளனர். குறுநில மன்னர்கள் ஒழிக்கப்பெற்றிருக்கின்றனர். வேளாண்மை யிலும் தொழிலிலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மருத்துவ வசதிகள் பெருக்கப்பட்டுள்ளன. கண்பார்வை குறைந்தவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்து மீண்டும் ஒளி வழங்கும் அரிய பணியை மதுரை தொடங்கி, தமிழ்நாடெங்கும் இப்போது பரவி வருகிறது. ஆகாய விமானப் போக்குவரத்தும் விரிவடைந்திருக்கிறது. கோடைக்கானல் மலைநகரம் பல துறை களிலும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. பழனித் தலம், அதன் ஆட்சி முறையிலும் அங்கு வருவோர்க்கு வசதி செய்வதிலும், கோயில் வருவாயைச் செலவிடுவதிலும், திருப்பதி வெங்கடாசலபதிக் கோயிலைப் பின்பற்றி வருகிறது. ஏலக்காய், கோக்கோ போன்றவற்றின் விளைவுகளும் பல மடங்காக்கப்பட்டிருக்கின்றன. எண்ணமுடியாத அளவுக்கு அரசாங்க அலுவலகங்கள் பெருகி யுள்ளன. ஊராட்சி ஒன்றியத் திட்டத்திலும் கிராமதான் இயக்கத்திலும் மதுரைதான் தமிழ்நாட்டின் முன்னோடியாக இருக்கிறது. இசைவளர்ச்சியிலும் நாடகவளர்ச்சியிலும் மதுரை முன்போல இன்றும் முதலிடம் வகிக்கிறது. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மதுரை ஒரு நாளும் பின்வாங்கவில்லை. இன்றும் அப்பணியை மதுரையில் இயங்கும் நான்காம் தமிழ்ச் சங்கமும், மதுரைப் பல்கலைக்கழகமும், திருவள்ளுவர் சுழகம் போன்ற அமைப்புகளும், பல மன்றங்களும், அடாது மழைபெய்தாலும் விடாது நடத்தும் பட்டிமன்றங்களும் இனிது செய்துவருகின்றன. "பாண்டிய நின்னாடுடைத்து நல்ல தமிழ்” என்ற ஔவை வாக்கு இன்றைய மதுரைக்கும் பொருந்தும்.