உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 ஆங்கிலேயர் ஆட்சி 1801 இல் மதுரைச்சீமை சென்னை இராசதானியின் ஆங்கிலேய கவர்னரின் ஆட்சிக்கு உட்பட்டது. 1885-இல் நில அளவு, நிலவரி முதலியவற்றுக்குச் சென்னை இராசதானி யெங்கும் ஆங்கிலேயர் ஒரே முறையைக் கடைப் பிடித்தனர். இதனால் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. நெடுங்காலம் திண்டுக்கல்லுக்கு ஒரு தனிக் கலெக்டர் இருந்து வந்தார். மதுரை, கோடைக்கானல் ஆகிய இரு நகரங்களின் வளர்ச்சியில் ஆங்கிலேயர் அக்கறை காட்டினர். இங்கு ஆங்கிலேயர் பலர் வாழ்ந்தனர். இதனால் மதுரையில் கலெக்டர், நீதிபதி, போலீஸ் துறைத் தலைவர் போன்ற பெரும் பதவிகள் ஆங்கிலேயருக்கே வழங்கப் பெற்றன. கிறித்தவ மதம் ஆங்கிலேயர் ஆட்சியில் பெரிதும் பரவியது. ஆனால் இந்துக் கோயில்களின் நடைமுறையில் ஆங்கிலேயர் தலையிடவில்லை. ரூஸ் பீட்டர் முதலிய ஆங்கிலேயக் கலெக்டர் கள் மதுரை மீனாட்சியம்மனிடம் ஈடுபாடுடையவராய்ப் பல நகைகளை அந்த அம்மனுக்கு வழங்கினர். பெரியாற்று நீர் வரவழைக்கப்பட்டு இம் மாவட்டத்தில் வேளாண்மை பெருக்கப்பட்டது ஆசியாவிலேயே பெரிய நூலாலைகளுள் ஒன்றான மதுரை ஆலையை ஆங்கிலேய வணிகர் நிறுவினர். இவ்வாறே திண்டுக்கல்லில் ஆங்கிலேயர் சுருட்டுத் தொழிற்சாலையும் ஏற்படுத்தினர். விடுதலை இயக்கம் இந்திய விடுதலைப் போரில் மதுரை முக்கிய இடம் பெற்றிருக்கிறது. இதைப்பற்றி, நூலின் பிறிதொரு பகுதியில் விரிவாகக் கூறுவோம். மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையில் மதுரைக்குச் சிறப்பிடம் உண்டு. சுதந்தரத்திற்குப்பின் 1947-இல் இந்தியா சுதந்தரம் பெற்றது. அதன் பயனாக இந்திய அரசும் மாநில அரசும் மதுரையின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக உள்ளன. அரசியலில் மதுரையின் முக்கியத்துவத்தை 3