உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை நூல்கள் ஒருவர் தமிழகத்தில் உலகநாடுகளைப் பார்த்து பிரயாண எழுதுவதில் வல்லவர்களாகத் திகழ்கின்றவர்கள் இருவர். உலகம் சுற்றும் தமிழன் திரு.ஏ.கே.செட்டியார். மற்றவர் நம் நூலாசிரியர் திரு. சோமலெ அவர்கள். திரு.சோமலெ அவர்கள் உலகத்தின் அவர்கள் உலகத்தின் பல பாகங்களுக்கும் சென்று பரந்த அனுபவ அறிவு பெற்றவர். அவருடைய நுணுக்கமான அறிவு நமக்கு எந்த பிராந்தியத்தைப் பற்றிச் செய்திகள் வேண்டு மானாலும் அவற்றை ஒரு கலைக் களஞ்சியம் போல் தரக்கூடியது. நாம் தினமும் செல்லும் போது நம் கண்ணிற்குப் புலப்படாதவை அவர் கண்ணுக்கு புலப்படும். இத்தகைய சிறப்புக் குணங்கள்தான் அவர்களை நமக்கு சிறப்பித்துக் காட்டுகின்றது. குருகுலத்தந்தை அவர்கள் காலத்திலேயே வேதாரண்யம் வந்து தங்கி தஞ்சை மாவட்டத்தைப்பற்றி நூல் வெளியிட வேண்டிய முயற்சிகள் எடுத்துக்கொண்டார்கள். நாம் உலகநாடுகளைப் பற்றி பெற்றிருக்கும் அளவு அறிவு நமது சொந்த ஊரைப்பற்றி, நமது சொந்த மாவட்டத்தைப்பற்றி, ஏன் நமது தமிழகத்தைப் பற்றியே கூட ஒன்றும் அறிந்திருப்பதில்லை. இதையே ஒரு எழுத்தாளன் எடுத்துக்காட்டும் போது நம் அருகில் இப்படிப்பட்ட இப்படிப்பட்ட பெருமைவாய்ந்த இடங்கள் இருக்கின்றனவா என்று எண்ணத் தோன்றுகிறது. இத்தகைய முயற்சியில்தான் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்தைப்பற்றியும் பல நூல்கள் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் தஞ்சை மாவட்டம் பற்றியும் ஒன்று. இப் போது மதுரை மாவட்டம் பற்றி நன்கு ஆராய்ந்து நேற்று வரையுள்ள பல செய்திகளையும் சேகரித்து ஒரு அழகிய நூலாக ஆக்கித்தந்திருக்கின்றார்கள். உலகத் தமிழ் மகாநாடு மதுரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரை_மாவட்டம்.pdf/5&oldid=1684472" இலிருந்து மீள்விக்கப்பட்டது