உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடக்கவிருக்கும் இந்த நேரத்தில் மதுரை மாவட்டம் பற்றிய இந்த நூல் வெளிவருவது மிகவும் பொருத்தமானது. மதுரை மாவட்டத்தைப் பற்றி அங்கு கூடும் பெரியவர்கள் பூரணமாக அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும். நாட்டு நலன்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் பலருக்கும் ஒரு பயனுள்ள நூலாகும் இது. திரு. சோமலெ அவர்கள் நாங்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் நமது குருகுலத்தின்பால் அன்புகொண்டு இந்நூலை குருகுல வெளியீடாகவே கொண்டுவர அன்புடன் இசைந்தார்கள். குருகுலத் தின்பால் அன்புகொண்டு குருகுலத்தந்தையின் வரலாற்றைத் தொகுக்கும் பணியைச் செய்து முடித்திருக்கின்றார்கள். அந்நூலும் விரைவில் வெளிவர இருக்கிறது. அவர்களுக்கு நாம் பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம். எப்போதும் போல் நமது குருகுல அச்சகப்பள்ளி பெண்கள் குருகுல வெளியீடுகளை மிகவும் சிரத்தையுடன் அச்சிட்டுக் கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கும் எங்களது உளம் நிறைந்த பாராட்டுதல் களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நூலை அன்பர்கள் ஆதரித்து குருகுலப் பணியை மேலும் சிறக்க உதவ வேண்டிக் கொள்கிறேன். குருகுலம் ஒரு அறக்கட்டளை. இதன் தொண்டுகள் பொது நல நோக்கமுடையன. ஆகையால் நூலின் விலையை நிர்ணயிப்பதிலும்கூட பொது நோக்கைக் கொண்டே நமது இயல்பான போக்கில் நிதானமாகவே வைத்திருக்கிறோம். இத்தகைய பிரயாண நூல் எழுதுவதில் அதிக செலவும் உழைப்பும் தேவைப்படும். இருப்பினும் ஒரு தொண்டு உள்ளத்துடன் நடக்கும் நிறுவனமாகையால் அந்த கொள்கைப்பிடிப்பின்படியே நூல்கள் வெளியீட்டையும் செய்து வருவதை அன்பர்கள் உணர்ந்து தங்கள் ஆதரவைக் கொடுப்பார்கள் என்று பெரிதும் நம்புகிறோம். வேதாரண்யம், 2-12-1980 வே. அப்பாக்குட்டி, மானேஜிங் டிரஸ்டி, கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரை_மாவட்டம்.pdf/6&oldid=1684473" இலிருந்து மீள்விக்கப்பட்டது