உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இப்பெருமாள் திருமுன்புக்குத் தென்பால் மதுரவல்லித் தாயார் திருமுன்பும், வடபால் ஆண்டாள் திருமுன்பும் அமைந்துள்ளன. இக்கோயிலை (1) திருமங்கை ஆழ்வார், (2) பெரியாழ்வார், (3) திருமழிசை ஆழ்வார் ஆகியோர் பாடியுள்ளனர். சிற்பச் சிறப்பும் இக்கோயிலுக்கு உரியது. குரவைக் கூத்தின் இறுதியில் மாதரி நெடுமாலை வழிபடச் சென்றதாகச் சிலப்பதிகாரம் செப்புகிறது. அவள் அவ்வாறு வழிபட்ட நெடுமாலின் திருப்பெயரை, ஸ்ரீ இருந்தவளமுடையார் என்று அரும்பதவுரை ஆசிரியரும் அந்தரவானத் தெம்பெருமான் என்று அடியார்க்கு நல்லாரும் கூறுவர். இருந்த கோலத்தில் காணப்பெறும் பெருமான் ஸ்ரீ இருந்தவளமுடையார்; விமானத்தில் காணப்பெறும் பெருமான் அந்தரவானத்தெம் பெருமான். எனவே இவ்விரு பெயர்களும் கூடல் அழகரையே குறிப்பன. இம் மாவட்டத்தில் வைணவத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது அழகர் கோயிலைப் பற்றியும் திருமோகூரைப் பற்றியும் சொல்ல வேண்டும். இவைபற்றி, இந்நூலின் பிற பகுதிகளில் விரிவாகக் கூறுவோம். . இம் மாவட்டத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தைப் போல, சைவ-வைணவச் சண்டை இல்லை என்பதும் இங்கு நிகழும் சித்திரைத் திருவிழா, கள்ளழகரும் பங்கு கொள்ளும் . சிறப்புடையது என்பதும் கருத்திற் கொள்ளத்தக்கன. மெய்காட்டு பெரியாழ்வாருக்கு மகாவிஷ்ணு காட்சி கொடுத்த பொட்டல்' என்னும் டம் இந்நாளில் 'மேங்காட்டுப் பொட்டல்' எனவும் 'Main Guard Square எனவும் பேர் பெற்றிருக்கிறது. தமக்கு இறைவன் காட்சி கொடுத்ததற்காகப் பெரியாழ்வார் இறைவனுக்கே பல்லாண்டு பாடினார். ஓராண்டுக்கு ஒரு முறை கூடலழகர் கோயிலிலிருந்து உற்சவரை இங்குக் கொண்டுவந்து விழா நடத்துகின்றனர். ச் சமணம் இம்மதம் ஜைனம் என்றும் சைனம் என்றும் பெயர் பெறும். இச் சமயத்தினர் வழிபடும் கடவுள் அருகன் எனப்படுவார். சமணர் என்னும் சொல் உடையற்றவர், பற்றற்றவர் எனப் பொருள்படும்.