உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 சமணத்தின் வருகை வட இந்தியாவிலிருந்து வந்த சமணத் துறவிகள் இன்றைய கர்நாடக மாநிலத்திலுள்ள "சிரவணபெலகோலா" என்னும் இடத்தில் மையம்கொண்டு தென்னிந்தியாவில் சமணத்தைப் பரப்பினர். சில ஆயிரம் சமணத் துறவிகள் சிரவணபெலகோலா விலிருந்து மதுரைக்கு வந்து திகம்பர சைன மதத்தைப் பரப்பினர் என்பது பாலி மொழியிலுள்ள நூல்களாலும் தமிழ் நூல்களாலும் உறுதிப்படுகிறது சங்ககாலத்தில் சமணம் பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் மதுரையில் சமணம் பரவியிருந்ததைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மதுரையில் சைனப்பள்ளி இருந்தது "அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளி" என்று இக்கோயிலைச் சிலம்பு (14:12) குறிப்பிடு கிறது. மதுரை சைனப்பள்ளியைப்பற்றி மதுரைக்காஞ்சியும் (வரி 475-487) கூறுகிறது. சமணத்துறவிகள் தங்கியிருந்த குகைகளும் படுக்கைகளும் மதுரையைச் சுற்றியுள்ள ஆனைமலை, மேலக்குயில்குடி முதலிய மலைகள் பலவற்றிலும், கீழவளவுக்கு அருகேயுள்ள பஞ்ச பாண்டவர் மலையிலும், திண்டுக்கல்லுக்கு அருகே கரூர்ச் சாலையில் சுக்கலியூர் என்னும் ஊர்க்குன்றிலும் கி.மு. 2-ஆம் நூற்றாண்டு முதலே இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. இயேசு பிறப்பதற்கு முன்னரே சமணர் மதுரை நகர்க்கு வந்தனர் என்றும், கூடல் என்னும் பெயருக்கு மாறாக மதுரை என்னும் பெயரைச் சமணரே இட்டனர் என்றும் ஆராய்ச்சியாளர் டாக்டர் க.ப. அறவாணன் கருதுகிறார். சமணர் வாழ்ந்த குகைகள் சமணத் துறவிகள், மலைகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் தங்கினர். அவை எளிதில் அடையமுடியாத இடத்தி லும் இயற்கையாக அமைந்த சுனைகளின் அருகிலும் உள்ளன. மன அமைதியுடன் இருக்க இத்தகைய சூழ்நிலைகளை விரும்பி அவர்கள் அங்கு வாழ்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு அரசர்களும் வணிகர்களும் குகைகளின் உட்புறத்தைத் தங்குவதற்கு ஏற்ப மழ மழப்பாக்கியும், கல்லிலேயே தலையணைபோன்ற அமைப்பினைச் செய்தும் அளித்தனர். அவ்வாறு அளித்ததைக் குறிப்பதற்காக