உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அப்படுக்கைகளின் மேலும், குகையின் முகப்பிலும் கல்வெட்டு களாகப் பொறித்தனர். இப் படுக்கைகள் பாழி" என்றும் "பஞ்சபாண்டவர் படுக்கைகள்" என்றும் அழைக்கப்படுகின்றன. இத்தகைய படுக்கைகள் தமிழகத்தின் பல குன்றுகளில் காணப் படுகின்றன. சமணர் தங்கிய மலைகளும் குன்றுகளும் எங்கு ஏராளமாக இருக்கின்றன என்று பார்க்கும்பொழுது ஓர் உண்மையும் வெளிப் படுகிறது. முடியுடை மூவேந்தர் தலைநகர்களைச் சுற்றியே இவை பெரும்பாலும் காணப்படுகின்றன. சங்கம் வைத்துச் சிறந்த தமிழ்மதுரை, சேரர் தலைநகராம் கருவூர், சோழர் உறைவிடமாம் உறையூர், பல்லவர் தலைநகரான காஞ்சி ஆகிய நகர்களின் அருகே இக் கல்வெட்டுகள் மிகுதியாக இருக்கின்றன.நாடாண்ட அரசர்களும், பொருள் ஈட்டுவதிலே முனைந்திருந்த வணிகர்களும் தானங்கள் கொடுத்ததாகக் கல்வெட்டுகள் குறிப்பதிலிருந்து அரசியல் செல்வாக்கும், வணிகப் பெருமக்களுடைய போற்றுத லும் இச் சமயத்தார்க்கு முழுமையாகக் கிட்டின என்று தெரி கிறது. இவ்வாறு தொன்மையான து, கிடைத்துள்ள கல்வெட்டுகளில் காலத்தால் பாண்டியப் பெருமன்னன் "பணவன், கடலன், வழுதி" என்று பட்டம் ஏற்ற நெடுஞ்செழியனுடையது என்று அவன் கல்வெட்டிலிருந்து அறிகிறோம். மதுரையிலிருந்து ஏறத்தாழ 20 கி.மீ. தொலைவில் மீனாட்சிபுரம் என்னும் சிற்றூரில் அவன் கொடுத்த சமணப்பாழி இருக்கிறது. திருமாலிருஞ்சோலை என்றும் பழமுதிர்சோலை என்றும் புகழப்பெறும் அழகர்மலையிலும் கி மு.மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளும் இருக்கைகளும்இருக்கின்றன. அழகர்மலை ஊரிலிருந்து மலையோரமாகச் செல்லும் நெடுஞ்சாலையில் ஏழு கி.மீ. தொலைவில் கரடிப்பட்டி என்னும் சிற்றூர் இருக்கிறது இங்கிருந்து 3 கி மீ. தூரத்தில் புதர்மண்டிக் கிடக்கும் பாதையில் சென்று நெட்டுக்குத்தலாக உள்ள மலைமீது ஏறிச் சமணர் தங்கி யிருந்த பகுதியை அடையலாம். மதுரையில் இருந்த வணிகர்கள் பலர் அங்குப் பாழி அமைக்க, பெரும் பொருள் வழங்கியிருக் கிறார்கள். உப்பு வணிகன், பொன் வணிகன், கூல வணிகன் முதலிய பல்துறை வணிகர்களும் பொருள் கொடுத்ததைப் பத்து மீட்டர் உயரத்திற்கும் மேலே பாறை முகட்டில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் காணலாம்.