உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 மணிவாசகப் பெருமான் பிறந்த திருவாதவூரிலும் ம் கிறிஸ்துவுக்கு 300 ஆண்டுகளுக்கு முன்னரே சமணப்பெரியார்கள் வாழ்ந்த தடயங்களும் கல்வெட்டுகளும் உள்ளன. இதுபோல் கருங்காலக்குடி, கீழவளவு, கொங்கர்புளியங்குளம், முத்துப்பட்டி, மேட்டுப்பட்டி, வரிச்சியூர் ஆகிய இடங்களில் சமணப்பெரியார்கள் வாழ்ந்த இடங்களும் கல்வெட்டுகளும் அன்று எவ்வளவு மேன்மை யான நிலையில் நிலையில் இச்சமயம் திகழ்ந்தது என்பதற்குச் சான்றாக விளங்குகின்றன. சமணர்கள் பழங்காலத்தில் மிகுதியும் தங்கிவாழ்ந்த எட்டு மலைகள், "பரங்குன் றொருவகம் பப்பாரம் பள்ளி அருங்குன்றம் பேராந்தை யானை- இருங்குன்றம் என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச் சென்றெட்டு மோபிறவித் தீங்கு'" என்று பெருந்தொகை வெண்பா கூறுகிறது. இருங்குன்றம் என்ற மாலிருஞ்சோலையில் சமணர்களும் பௌத்தர்களும் வாழ்ந்து வந்தனர் என்று மேற்கண்ட வெண்பாவை ஆதரித்து, அடியிற் காணும் திருமங்கை மன்னன் பாசுரம் பாசுரம் [பெரிய திருமொழி] கூறுவது காணலாம். 'புந்தியில் சமணர் புத்தரென் றிவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு எந்தை பெம்மானா ரிமையவர் தலைவர் எண்ணிமுன் னிடங்கொண்ட கோயில்," - இந்த மலைகளில் மட்டும் சமணப் பெரியார்கள் வாழ்ந்தார்கள் என்று நினைத்துவிடவேண்டாம். மதுரையைச் சுற்றியுள்ள எல்லா மலைக்குன்றுகளிலும் சமணப்பெரியார்கள் வாழ்ந்த தடயங்கள் இருக்கின்றன. சற்றேறக்குறைய கிறிஸ்துவின் சமகாலத்துச் சமணக் கல்வெட்டுகள் ஆனைமலை, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் உள்ளன. "ஆனைமாமலை ஆதியாய இடங்களில்' என்று ஞானசம்பந்தப் பெருமான் பாடுகின்றாரே அந்த மலையினுடைய பெயர் 'இவகுன்றம்' என்று (இவம்-யானை: யானைக்குன்று] 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக் கூறுகின்றது. அப்பொழுதிருந்தே இம்மலை யானைமலை என்று பெயர் பெற்றுள்ளது என்பதற்கு இது சான்று. .