உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருப்பரங்குன்றத்தில் அந்துவன் என்ற ஒருவர் கற்படுக்கை கொடுத்துள்ளார். சங்க இலக்கியத்தில் நல்லந்துவன் என ஒரு புலவர் குறிக்கப்படுகிறார். திருப்பரங்குன்றம், ஆனைமலை, கீழக்குயில்குடி முதலிய இடங்களில் சமண தீர்த்தங்கரர் உருவங்கள் செதுக்கப்பெற்று, வழிபாட்டுக்காகப் பொருள்களும் நிலங்களும் ம் கொடுக்கப் பெற்றன. மதுரைக் காஞ்சி என்னும் நூலில் மாங்குடிமருதனார் மதுரையில் சமணசமயம் பரவியிருந்ததை, பின்வரும் கருத்துப் படப் பாடியிருக்கிறார். "அருக சமயத்தினர் முக்காலமும் உணரத்தக்க அறிவைப் பெற்றவர். அவர்களுக்குத் தேவருலகத் திலும் பிறஇடங்களிலும் நடைபெறும் செய்திகளைத் தாமிருந்த இடத்திலிருந்தே அறியும் ஆற்றலுண்டு. கல்விகளெல்லாம் நிறைந்து களிப்பின்றியடங்கின. அறிஞர்களாகிய அவர்கள் தாங்குதற்கரிய பல விரதங்களைத் தாங்கியும் உடல் இளைக்கப் பெறாதவர்களாயிருந்தனர். கல்லைப் பொளிந்தாற் போன்ற சிறிய வாயையுடைய குண்டிகையைப் பல கயிறுகளாலமைந்த உறியிலே கட்டித் தொங்க விட்டிருந்தனர். அவர்களின் இல்லங்கள் குளிர்ந்த குளங்களைப் போலத் தண்ணென்றிருந்தன. சுவர்கள் செம்பாற் செய்தனபோல விளங்கின. அவற்றிலே பலவகைச் சித்திரங்கள் எழுதப்பட்டிருந்தன. மேல்நிலம் பார்ப்பவர் கண்களைத் தகைக்கும்படி உயர்ந்திருந்தது. மலைகள் பல ஒருங்கே திரண்டு நின்றனவோவென அவ்வில்லங்கள் தோன்றின. அவற்றைச் சூழ்ந்து பூஞ்சோலைகள் மணம் வீசின. அங்கிருந்து கொண்டு சமணர்கள் தங்களுக்குரிய அந்திப் பூசைகளை ச் செவ்வனே செய்தனர் மேலூரிலிருந்து 16. கி. மீ. தொலைவில் கொட்டாம்பட்டிச் சாலையில் உள்ள கருங்காலக்குடிக்கு அப்பால் 2 கி. மீ. தூரத்தில் உள்ளது. பஞ்சபாண்டவர் மலையென்று தவறாகக் குறிப்பிடப்படும் இப்பகுதி, சமணர் வாழ்ந்த மலையே ஆகும். ஒரு மலை திருவாதவூர்ப் புறத்தேயுள்ள சிறுகுன்று ஒன்றில் இயற்கை யான குகைத்தளத்தில் கல்வெட்டுகள் உள்ளன. இல்வாழ்க்கை வாழ்ந்து சமயநெறியில் நிற்பவர்களைக் குறிக்கச் சமணர் பயன்படுத்தும் "உபாசம்", "பரசு" என்னும் சொற்கள் இக் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. எனவே, சமண குடும்பங்கள் இங்கு வாழ்ந்தன என்று கொள்ளலாம்.