உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 மேலூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் திருப்புத்தூர்ச் சாலையில் கீழவளவுக்குச் சற்று மேற்கே ஒரு மலை உளது. பஞ்சபாண்டவர் மலையென்று இதுவும் தவறாகச் சுட்டப்படுகிறது. இங்கும் சமணதீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப் பெற்றிருக்கின்றன. ஆனைமலையைப் போல இங்கேயும் ஓவியங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. சின்னஞ்சிறு பகுதிகளே எஞ்சியுள்ளன. அண்டை மாவட்டங்களில் சமண ஓவியம் இவ்வாறு சமணர் படைத்த ஓவியங்கள் அனைத்திலும் தலைசிறந்தது புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டம் சித்தண்ணவாசலில் [சிற்றண்ணவாசல்] உள்ள கவினுறு ஓவியமாகும். இந்த ஓவியம் ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன்' என்ற பாண்டிய மன்னனின் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்டது என்றும், மதுரை ஆசிரியன் இளங்கௌதமன் என்ற ஓவியப் புலவன் எழில்மிக்க இந்த ஓவியத்தை அமைத்தான் என்றும் கல்வெட்டுகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. சமணம் பரவியிருந்த ஊர்கள் மதுரையில் கால்கொண்ட சமணம் ங்கிருந்து ராமநாதபுர மாவட்டத்தில் (1) தேவகோட்டை - வட்டாணம் சாலையிலுள்ள அநுமந்தக்குடிப் பகுதியிலும், (2) திருச்சுழிக்கு அருகேயுள்ள பள்ளிமடம் பகுதியிலும், (3) காளையார் கோயில் சமீபமுள்ள பள்ளித்தம்பம், சண்முகநாத பட்டணம் என இப்போது பெயர் மாற்றப்பட்டுள்ள கோயில் இல்லாப்பட்டி, சீனமங்கலம் என வழங்கும் ஜீனமங்கலம் முதலிய ஊர்களிலும் (4) திருப்புத்தூர் வட்டம் மகிபாலன் பட்டியிலும், (5) பரமக்குடி வட்டம் இளையான்குடியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் சிற்றண்ணவாசல், தேனிமலை முதவிய ஊர்களிலும் பரவியிருந்தது. அரசு பாண்டிய நாட்டில் இவ்வாறு எற்றம் பெற்று ஆதரவும் பெற்றிருந்த சமணர்கள் தங்கள் தீர்த்தங்கரர்களின் உருவங்களை கருநாடகத்தில் ஆசன் மாவட்டத்திலும் தென் கன்னட மாவட்டத்திலும், மலைகள் பலவற்றில் நீண்டுயர்ந்த அமணத் திருமேனியாக நிலைநாட்டியிருப்பது போல மதுரைப் பகுதியிலும் நிறுவித்தான் இருப்பார்கள் என்று கருதலாம். அவ்வாறு நிறுவியிருந்தால் அவை திருஞானசம்பந்தர் வருகைக்குப் 4