உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 திரும்பப் பெற்றுச் சென்றான். இப் பல்லினைக் கருப்பொருளாகக் கொண்டு கட்டப் பெற்ற கோயிலே, இலங்கையின் பழம்பெரும் தலைநகராகிய கண்டிக்குப் புகழ்தருகிறது. இசுலாம் மதுரை மாவட்டத்தில் முஸ்லிம்கள் எட்டாம் நூற்றாண்டு முதல் இருந்து வருவதாகக் கருதலாம். அந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கருதப்படும் மாணிக்கவாசகர், முஸ்லிம் குதிரைவணிகர் உருவில் பாண்டிய மன்னரின்முன் சிவபெருமான் தோற்றம் வழங்கியதாகத் திருவாசகத்தில் அன்னைப்பத்திலுள்ள (வெள்ளைக் கலி என்று தொடங்கும்) ஏழாவது ஏழாவது செய்யுளில் குறிப்பிட்டுள்ளார். குதிரை வீரராக வந்த ராவுத்தருக்கு வரிசை வழங்க வேண்டுமென்று எண்ணி ஓர் அழகிய ஆடையைப் பாண்டியன் அளித்தான் என்று திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. இன்றுகூட ஆவணிமூலத் திருவிழாவின்போது, ஒரு முஸ்லிம்,குதிரை வணிகர் வேடத்தில் குதிரைமீதேறி பவனி வருகிறார். அவருக்கு இப்பணிக்காகக் பாரம்பரியமாக மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து மானியம் வழங்கப்பெற்று வருகிறது. மீனாட்சியம்மனுக்கு மூக்குத்தி அணிவிக்கும் வழக்கத்தை முஸ்லிம்கள்தாம் புகுத்தினர் என்று இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் மூன்றாம் தொகுதியில் திரு.எம்.ஆர், அப்துற் றஹீம் தெரிவித்துள்ளார். ம் முஸ்லிம் ஆட்சி 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரையில் ஆட்சி செய்துகொண்டிருந்த சுந்தரபாண்டியனின் குடும்பத்துக்குள் ஏற்பட்ட பூசலால் அவன் டில்லி சுல்தானாக இருந்த அல்லாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் உதவியை நாடினான். இத்தகைய வாய்ப்பை எதிர்பார்த்திருந்த மாலிக் காபூர், கி.பி.1334-இல் பாண்டிய நாட்டைக் கொள்ளையடித்து, கோயில்களை இடித்து மக்களுக்கு இன்னல் விளைவித்தான் என்று வரலாற்றில் படிக்கிறோம்.