உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 டில்லி சுல்தான்களின் ஆட்சி 44 ஆண்டுக்காலம் மதுரையில் க்காலத்தைப்பற்றி History of Madurai Sultanate' என்னும் நூலை டாக்டர் ராஜய்யன் எழுதியுள்ளார். நடைபெற்றது. ஆட்சி செய்த 8 சுல்தான்களின் விவரம் வருமாறு: 1. ஜலாலுதீன் அஹ்சன் ஷா அல்லாவுதீன் கில்ஜி 2. 3. 4. 5. குத்புதீன் பெரோஸ் ஷா கியாசுதீன் தமகான் ஷா நசீருதீன் 6. அதில் ஷா 6, 7.பஹ்ருதீன் முபாரக் ஷா 8. அல்லாவுதீன் சிக்கந்தர் ஷா 1335-1340 1340-41 (50 நாள்கள்) 1340-1342 1342-1356 1356-1360 1368-1372 1372-1378 இக்காலம் முழுவதும், அவசரகால நெருக்கடி ஆட்சிபோல இருந்தது; இந்துக்கள், ஆட்சியாளரின் இராணுவ நடவடிக்கை களுக்கு அஞ்சி வாழ்ந்தனர் ; வேதம் ஓதுவதையும் கைவிட்டனர்; அக்கிரகாரப் பகுதிகளுக்கு அருகே ஆட்டு இறைச்சிக் கடைகள் ஏற்பட்டன (என்கிறார் மதுரைப் பல்கலைக்கழகத்து வரலாற்றுத் துறை அறிஞர் திரு. செல்வக்குமார்). ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறப்பாக விளங்கும் கட்டடக்கலையின் சின்னமாக வைகைக் கரையில் கோரிப்பாளையத்தில் அழகியதொரு தர்கா கட்டப் பட்டது. சுல்தான்கள், ஹொய்சாளருடன் போர்புரிந்த போர் வீரர்கள்,ஏனைய பெரியவர்கள் ஆகியோர் பலர் இங்கு நல்லடக்கம் செய்யப்பெற்றுள்ளனர். ஜலாலுதீன் அஹசன் ஷா, மதுரை வீதிகளை, வீதிகளைப்போல அகலப்படுத்தினான் என்றும் தெரிகிறது. டில்லி ஆர்க்காட்டு நவாபாக இருந்த சந்தா சாஹிப் 1736-இல் திண்டுக்கல்லைத் தனது ஆட்சிக்குக் கொண்டுவந்தான். மைசூரை ஆண்ட முஸ்லிம் ஆட்சியாளர்கள் 1742 முதல் திண்டுக்கல் பகுதியில் ஊடுருவினர். அவர்களுக்கும் பிரதி நிதித்துவம் கொடுத்து, திண்டுக்கல் சீமை 18 ஆட்சிப் பகுதிகளாக நிர்வகிக்கப்பட்டது. இதன் பின்னர் ஹைதர் அலி திண்டுக்கல் கோட்டையைக் கைப்பற்றி 1755 முதல் அதன் 'பாஜ்தார்' என்ற சிறப்புப் பெயருடன் தன்னுடைய பிரதிநிதிகள் மூலம் இவ் வட்டாரத்தை சி செய்ததோடு இங்குப் பெரியதொரு காலாட்படையையும்