உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்திருந்தான். ஹைதரின் மைத்துனன் மிர் ராஜலிக்கர் மனைவி (பேகம்) அடக்கம் செய்யப்பட்ட இடத்தைச் சுற்றி ஏற்பட்ட ஊரே பேகம்பூர் ஆகும். அவனுடைய பிரதிநிதியாக இருந்த சையது சாஹிப் 1784 முதல் 1790 வரை அக்கோட்டையை அக்கோட்டையை விரிவுபடுத்தினான். 1797 வரை ஹைதர் அலியின் மகனான திப்புசுல்தானின் ஆட்சி திண்டுக்கல் சீமையில் நிலவிற்று. மேற்கண்ட காரணங்களால், மதுரை மாநகரிலும் திண்டுக்கல் நகரிலும் இன்றளவும் ஏராளமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். உத்தமபாளையம், பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர், வத்தலக்குண்டு, நத்தம், கொட்டாம்பட்டிப் பகுதிகளிலும் முஸ்லிம்கள் தொகுப்பாக உள்ளனர். உத்தமபாளையத்தில், பெரும்பான்மையான முஸ்லிம்களே ஆவர். இவர்கள் மக்கள் அனைவரும் திருநெல்வேலி மாவட்டத்தில் வறட்சி நிலவியபோது இங்குவந்து குடியேறினர் என்று தெரிகிறது. இவர்களும் கம்பம், பெரியகுளம், போடிப்பகுதி களில் வாழும் முஸ்லிம்களும் கேரளத்திலுள்ள ஏலக்காய், காப்பி, மிளகு, ரப்பர், தேயிலைத் தோட்டங்களைப் பயிரிட்டு வாழ்கின்றனர். உத்தமபாளையத்தில் பிறந்த பெருவள்ளல் கருத்தா ராவுத்தர், இந்நகரில் ஒரு கல்லூரியை நிறுவியுள்ளார். வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் பல்லாண்டுகள் முதல்வராக இருந்த அபூபக்கர், திருக்குரானுக்கு ஏழு தொகுதிகள் விளக்க உரை எழுதிய மௌல்வி அப்துல் காதர் பாகா, சிறந்த எழுத்தாளரான பி. எஸ். கே. முகமது இப்ராஹீம் மற்றும் ஆசுகவிகளை ஈன்றெடுத்த பெருமை உத்தமபாளையத்துக்கு உரியது. இங்கு எட்டுப் பள்ளிவாசல்கள் உள்ளன. கம்பம் நகரில் 15000 முஸ்லிம்கள் ள்ளனர். ம் (1) ஜாமி ஆ மஸ்ஜித். (2) மஸ்ஜிதுல் இலாஹி என் னு பள்ளிவாசல்களும் இரு மதரஸாக்களும் அரபிப்பள்ளியும் முஹம்மதியா யதீம்கானா என்னும் அநாதை இல்லமும் இந்நகரில் இருக்கின்றன. பேகம்பூர் முஸ்லிம்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தோல்வியாபாரத்தில் பெரிய அளவில் ஈடுபட்டிருக்கின்றனர்.