உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மதுரை மாநகரில் நுகர்பொருள்கள் விற்பனையில், இராமநாதபுர மாவட்டத்து முஸ்லிம்கள் (பர்மா, இலங்கை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்த பின்னர்) ஈடுபட்டுள்ளனர். மதுரை கேரளத்திலிருந்து (மதுரை மாவட்டத்தில்)குடியேறியுள்ள முஸ்லிம்கள், உணவுக் கடைகளை நடத்துகின்றனர். மாவட்டத்து முஸ்லிம்கள் கடல்சார்ந்த நாடுகளுக்குச் செல்லுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் வழக்கம் கடலோர மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களிடம் மட்டுமே நிலவுகிறது. மசூதிகள் முஸ்லிம் ஆட்சியின்போது மதுரை மாநகரில் பல மசூதிகள் தோன்றின. இவற்றுள் பழமையானது 14-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது.அப்போது ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர் தம் கோடை அரண்மனையை ஒரு முஸ்லிம் துறவிக்கு வழங்கினார். அந்த இடத்தில் காஜிமார் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. வைகையின் வடகரையில் அமைந்துள்ள கோரிப்பாளையம் மசூதி மொகலாயக் கட்டட அமைப்பைக் கொண்டது. தொழுகைக்காக ஏராளமானவர் இங்குக் கூடுகின்றனர். 16-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இங்குள்ளது. நபிகள் நாயகத்தின் 42-ஆவது வாரிசான ஒருவர் 1811-இல் பள்ளிவாசல் ஒன்றை மீனாட்சி கோயிலுக்கு அருகில் கட்டினார். அவர் தாசில்தார் பணிபுரிந்து வந்தமையால் தாசில்தார் பள்ளி வாசல் என வழங்கிவருகிறது. முனிச்சாலையில் ஒரு பள்ளிவாசலும், வைகைக் கரையில் சுங்கம் பள்ளிவாசலும் உள்ளன. புலவர்கள் மதுரை மாவட்ட முஸ்லிம்களில் தமிழ்ப் புலவராகப் பலர் திகழ்ந்திருக்கின்றனர். இப்போது உள்ள மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் 'புலவராற்றுப்படை' குலாம் காதிறு நாவலரால் செய்யப்பட்ட சிறந்த நூல்களிலொன்று. இதற்குப் புரசை