உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 அட்டாவதானம் சபாபதி முதலியார் அவர்கள் மாணாக்கரும் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவருள் ஒருவருமாகிய திரு.மயிலை சண்முகம் பிள்ளையவர்கள் சிறப்புப்பாயிரம் அளித்திருக்கிறார்கள். இந்நூலில் தமிழ் நாட்டின் பழமையும் மதுரையம்பதியின் பெருமையும், மதுரைக்குச் செல்லும் வழியும் இடையே கிடைக்கும் வாகனங்களும், தமிழ்ச் சங்கத்தின் சிறப்பும் அங்கமரும் புலவர் களின் புகழும், பாண்டித்துரைத் தேவரின் கீர்த்தியும் கற்பனை நயத்துடன் விவரித்துக் கூறப்பட்டிருக்கின்றன. இது மிகப் பெருமைவாய்ந்த நூல். மதுரை மீசல் வண்ணக் களஞ்சியப் புலவர் என்பவர் மதுரை மீசலைச் சேர்ந்தவர். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். குத்பு நாயகம் என்னும் முகியத்தின் புராணம், இவருடைய நூல்களுள் தலையாயது. இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாறுதல்களின் விளைவாக அந்த நாட்டில் தொழில் செய்துவந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த முஸ்லிம்கள் மதுரையில் பலவகைத் தொழில்களைத் தொடங்கியுள்ளனர். இசுலாமிய சமய நிறுவனங்கள் அறக்கட்டளைகள் ஆகிய வற்றுக்குச் சொந்தமான சொத்துகள் மதுரை மாநகரின் வெளிப் பகுதிகளில், ஏராளமாக உள்ளன. இவற்றை மேற்பார்த்துவரும் வாக்ப்போர்டு என்னும் (அரசினரால் நியமிக்கப்படும்) வாரியம் மதுரையில் ஒரு கல்லூரியை நடத்தி வருகிறது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இசுலாமியத் தமிழ் ஆராய்ச்சிக்காக ஒரு பேராசிரியக் கட்டில் ஒன்றைத் தமிழக அரசு அமைத்துள்ளது. மதுரை மாவட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அழகர் வர்ணிப்பு என்ற பாடலிலும் இதைப் பற்றிய குறிப்பு உள்ளது. அழகர் வைகைக்கு வந்து திரும்பும் நாளில் வாணவேடிக்கை ஏற்பாடு செய்வது முஸ்லிம்களின் தனி உரிமையாக இருந்துவருகிறது. கிறித்தவர்கள் மதுரை மாவட்டத்தில் பல நூறாயிரம் - கிறித்தவர்கள் - கத்தோலிக்கரும், தென்னிந்தியத் திருச்சபையினரும் - வாழ்