பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அ.ச. ஞானசம்பந்தன் முடியாது. நண்பர் சளியால் அவதிப்படும்போது, 'சகோதரா! இன்ன இருமல் மருந்து சாப்பிடுங்கள், உடனே சளி தீர்ந்துவிடும்” என்கின்றேன். ஏன்? எனக்கு அதனால் நலன் ஏற்பட்டது என்பதனால் அவருக்கும் நன்மை விளையும் என்ற உறுதி அங்கே உள்ளது. ஆனால், அதே மருந்து அவருக்குத் தீமையும் செய்தல் கூடும். இதுபோல எல்லார்க்கும் நன்மை என்று உலகில் எதுவுமே இல்லை. உடலுக்குமட்டுமன்று; ஆன்மா விற்கும் அவரவர் நிலைமைக்கும் பக்குவத்திற்கும் ஏற்றாற்போல நன்மையும் தீமையும் அமைகின்றன. இதனை நம்பிய காரணத்தால்தான் கீழை நாட்டவர் விக்கிரக வழிபாட்டிலிருந்து தியானம்வரை பல்வேறு படிகளையும், நிலைகளையும் அமைத்தார்ககள். அவரவர் மனப் பக்குவத்திற்கேற்ப இப் பல படிகளும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கவையாகும். உபநிடத ஆசிரியரை அணுகி ஒரு சீடன் "ஐயா! நான் பிரமத்தைக் காண வேண்டுமே” என்று கேட்டான். "அப்படியா வாழ்வில் எது முக்கியம் என்று நீ கூறுகின்றாய்?" என ஆசிரியர் வினவ, "ஐயா! சோறு தான் வாழ்வில் முக்கியம்' என்றான் சீடன். "போதுமே! அன்னம்தான் பிரமம்” என்று கூறி அனுப்பினார். சில நாள் சென்றன. சீடன் வந்தான். "ஐயா! உடல் பெருத்ததே தவிர உணர்வு தோன்ற வில்லையே, பிரமத்தைக் கண்டேனில்லையே' என்றான். "உனக்குச் சோறு முக்கியம் என்றால் அதுவே பிரமம் என்றேன். அதைவிட முக்கியம் எது என்று கருதுகிறாய்” எனப் புதுவினை எழுப்பினார் ஆசிரியர். "ஐயா! சோறுகூட இல்லாமல் இருந்து விடலாம். தண்ணீர் இல்லாமல் இருத்தல் இயலாது" என்றான் சீடன், "சரி, ஜலம் பிரமம்” என்றார் ஆசிரியர். இப்படியே பல முறை மாறி மாறி வந்து