பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 0 அ.ச. ஞானசம்பந்தன் இதுதான் உணர்வின் அடிப்படையில் தோன்றிய சமயத்தின் இயல்பு. இந்த நாட்டு மக்கள் அவ்வாறு உணர்வின் அடிப்படையில் சமயத்தைக் கட்டினார்கள் என்றால், அதற்குரிய மூல காரணம் - அறிவின் துணைகொண்டு அமைவன மாறும் இயல்பின; வெறுப்புக்கும் வீழ்ச்சிக்கும் ஆளாவன என்பதேயாகும். மாறும் இந்த அடிப்படையில் மக்களின் நிலையான, அமைதியான வாழ்க்கைக்குத் தேவையான சமயத்தைக் கட்ட முடியாது என்ற உண்மையை உணர்ந்த நம்மவர் இவ்வாறு அமைத்தனர். அறிவு தேவைதான். ஆனால், அந்த அறிவுக்கு ஒர் எல்லையுண்டு. உணர்வு என்றும் ஒன்றாக இருக்கின்ற காரணத்தால் இந்த உணர்வின் அடிப்படையில் விளக்கப்படுகின்ற ஒன்று என்றும் நிலைபெற்று வாழக்கூடியது. ரைட் சகோதரர்கள் கண்டு பிடித்த விமானங்களில்தான் விரைந்து பறந்து செல்கின்றோம். ஆனால், அவர்களை அந்த ஊர்க்காரர்கள்கூட மறந்துவிட்ட நிலையைக் காண்கிறோம். விஞ்ஞானத்தின் அடிப்படையில் இவ்வாறு நன்மையை அடைந்த இந்த உலகம் அவர்களை மறந்துவிடுகிறது. ஆனால், உலகியல் முறையில் மக்கள் நன்றாக வாழ்வதற்கு, ஏசுநாதரோ, புத்தரோ, நம்மாழ்வாரோ, நாவுக்கரசரோ எந்த வழியையும் சொல்லவில்லை. ஆனாலும், இவர்களை மட்டும் உலகம் மறவாமல் நினைவில் கொள்கிறது. அறிவின் நெறியில் நின்று மக்களின் புற வாழ்க்கை வளம்பெறச் செய்த விஞ்ஞானப் பெரியவர்களை மறந்து விட்டு - சட்டையைக் கேட்டால் பணியனையும்