பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அ.ச. ஞானசம்பந்தன் காலத்திலிருந்து இதற்கு ஒரு சிறப்பிடம் கொடுத்து வந்துள்ளனர். அந்தத் தனி இடம் கொடுத்ததனா லேயே இந்த நாட்டுக்காரர்களுடைய சிந்தனைப் பரப்புக்கும் ஓர் அளவு தெரிகிறது நமக்கு இல்லை என்று சொல்பவனுக்கு முதலிடம்; எனவே, உண்டு என்று சொல்பவன் இல்லையென்று சொல்பவ னிடமிருந்து தொடங்குகின்றான். ஆகவே, முதல் நிலை எவருக்கு என்றால், இல்லை என்று சொல்கின்ற உலகாயத வாதிக்கு. அவனுடைய வாதம் மிகமிக அழகாக இருக்கும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமே யானால், என் வாழ்வே எனக்கு விளக்கமாக அமைகிறது. 1930-32-ஆம் ஆண்டுகளில் ஒரு கட்சியின் சார்பாகத் தீவிரமாக நின்று படிப்பதும் சிந்திப்பதும் செய்து, டைலக்டிகல் மெட்டீரியலிசம் என்ற ரஷ்ய நாட்டில் தோன்றிய ஒரு நூலையும், லெனினிசம் என்ற நூலையும் தமிழில் ஆக்க முயன்றேன். அப்படி அதில் ஈடுபட்டிருந்த போதுதான் என்னுடைய சிந்தனை விரிவடைய அது பேருதவி புரிந்தது. இதற்கு மறுப்புச் சொல்லக்கூடிய காட்சி ஒன்று இருக்கும் என்று நான் ஏற்றுக்கொள்ளவேயில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து, திவான்பகதூர் அரங்கசாமி அவர்கள், என்னுடைய வாழ்க்கையைத் திருப்பிப் பார்க்க வாய்ப்பளித்தார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் அதுபற்றிச் சிந்திக்கின்ற வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இப்போது இச் சொற்பொழிவு காரணமாக அவற்றை மீண்டும் நோக்குகையில் எப்படி எப்படியெல்லாம் இருந்திருக்கின்றேன், சிந்தித் திருக்கின்றேன் என்று என்னைப் பற்றியே எண்ணும் நிலைமையைப் பெற்றேன். 。