பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அ.ச. ஞானசம்பந்தன் இவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், நீ அதை அடக்கவே முடியாது; அவைகளும் தாமே அடங்கா. அப்படியானால், என்ன வழி? இந்த நாட்டுக்காரன் மனத்தையும் எண்ணங்களையும் வேறு திசையில் திருப்பு என்று சொன்னான். மடைமாற்றம் (sublimation) என்பது எளிதில் அனைவருக்கும் முடியாது என்பதால் இந்த நாட்டுக்காரன் மனத்தையும் பொறி புலன்களையும் திசை திருப்பச் சொன்னான். பஞ்சை வைத்தாலும்கூடக் கண்டிப்பாகச் சப்தம் கேட்கும். கேட்பது உறுதி என்றவுடன் நல்லதைக் கேட்டால் பரவாயில்லை என்றான். இந்த அளவிற்குப் போகிறான் புத்தன். 'சத் சங்கம் என்று கூறினான். அதாவது பலர் கூடிப் புத்தஞ் சரணம் கச்சாமி, 'சங்கம் சரணம் கச்சாமி என்று ஓயாமல் சொல்லிக் கொண்டேயிருப்பது நலம் என்றான். இந்த நாட்டுப் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் வேறு; பர்மா, இலங்கை, புத்த மதத்தைச் சேர்ந்தவர் கள் வேறு. பர்மாவிற்குப் போவீர்களானால், அவர்கள் மூங்கிலால் செய்த ஒரு மணியை வைத்து அடித்துக் கொண்டேயிருப்பார்கள். இது ஏன் எனச் சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தால், மனத்தைத் திருப்திப் படுத்துவதற்குத் தானே தவிர வேறொன்றுமில்லை. 'டொன், டொன் என்ற ஓசையை ஆதாரமாகக் கொண்டு புத்தஞ் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்று சொல்லுவார்கள். பொறி புலன்களை அடக்க முடியாதென்பதை அறிந்த இந்த நாட்டுக் காரர்கள் திசை திருப்பு' என்று சொல்லி விடுகின்றார்கள். கண்ணால் பார்க்கிறேனென்றால் அதற்கு ஒரு விக்கிரகம் வேண்டுமா என்று அதற்கு மேலே ஒருபடி போகின்றான். விக்கிரக வழிபாடு, எங்குமே வியாபித்திருக்கின்ற ஒன்று. அதைப்பற்றி மிக