பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 133 கண்டுவிட்ட ஒருவன் பிறரைத் திருத்துவதற்குக்கூடத் தனக்கு உரிமையில்லை என்று நினைக்கின்றான். ஒன்றை நியாயம் என்று கண்டது தன்னுடைய அளவில்தானே தவிரப் பிறரும் அதனை நியாயம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என வற்புறுத்து வதற்கு உரிமை இல்லை என்று நினைக்கின்றான். அதேபோல ஒருவனைத் துன்புறுத்துவதற்கும் தனக்கு உரிமையில்லை என்று நினைக்கின்றான். ஒருவன் துன்புறுவானேயானால் அவனுடைய துன்பத்தைப் போக்கத் தன்னாலான முயற்சியைச் செய்யலாமே தவிர, அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென்று வற்புறுத்துகின்ற அளவுக்கு ஒருவனுக்கு உரிமை இல்லை என்று கூறுகின்ற அளவு இவனுடைய ஆன்மிகம் வளர்ந்து வந்துள்ளது. காந்திஜியினுடைய வாழ்க்கையிலே இந்த அடிப்படையைப் பார்க்கின்றோம். ஆன்மிகம் என்பதைப் போர்வையாகக் கொள்ளவில்லை அவர், இந்த நாட்டுக்காரன் ஆன்மிகத்தைத் தன் உடம்பில் ஒடுகிற குருதியோடு கலந்ததாக நினைத்தானே தவிர சமயத்தை, அல்லது ஆன்மிகத்தைப் போட்டுக் கொள்கின்ற ஜிப்பாவாகக் கருதவில்லை. ஆகையினால்தான் இவர்கள் சமயம் பற்றிச் சட்ட திட்டம் அதிகம் வகுக்கவே இல்லை. இந்தச் சமயத்தைப் பின்பற்றிய நீ இந்தக் குறிக்கோளை மேற்கொள்ள வேண்டும்; இன்னது உண்ண வேண்டும்; இப்படிக் கோயிலுக்குச் செல்ல வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று சொன்னதே இல்லை. இந்தக் கட்டுப்பாடு விதிப்பதே ஆன்மிகத்திற்கு விரோதம் என்ற அளவிற்கு வந்துவிட்டார்கள் இந்த நாட்டு ஆன்மிக வாதிகள். பிற உயிர்களுக்கு இரக்கம் காட்டுதலே ஆன்மிகம் என்று இவன் கருதினான். அந்த