பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 135 விடுவதனால் எவ்வளவு உயிர்கள் நாசமாகின்றன! என்ற இரக்க உணர்வு தோன்ற ஓர் ஆட்டுக் குட்டியைத் தூக்கிக் கொண்டு யாகத்திற்குச் சென்றார். அரச குடும்பத்தில் பிறந்த இவர் ஓர் ஆட்டுக் குட்டிக்காகத் தன் உயிரைத் தியாகம் பண்ணத் துணிகின்றார். ஆன்மிகத்தை உணர்ந்தவன் தன் னுடைய ஆன்மாவிற்கும் ஆட்டுக் குட்டியின் ஆன்மா விற்கும் வேறுபாடு கருதுவதே கிடையாது. உலகாயதன் தான் கொண்ட கொள்கைக்காக உலகத்தில் உள்ள அனைவரையுங்கூட அழிக்கப் பார்ப்பான். இது இன்று நேற்றுத் தோன்றியதன்று, என்றுமே உள்ளது. ஆகவே, காந்திஜி தம்முடைய பெரிய வாழ்க்கையில் தியாகம்' என்ற ஒன்றை உயிர்நாடியாகக் கொண்டாரென்றால் அதுதான் ஆன்மிகம். ஆன்மிகவாதி ஒருவனுக்குத்தான் இந்தத் தியாக உணர்வு கிட்டும். ஆன்மிகவாதி அறிவின் துணைகொண்டு சமயத்தைக் கட்டவில்லை. ஆன்மிக உணர்வின் துணைகொண்டு கட்டினான். அந்த உணர்வு என்றும் ஒரே மாதிரியாக இருந்ததனால் வேத காலத்திலிருந்து 707 ஜெட் விமானம் பறக்கும் இன்றுவரை அவன் கட்டிய தத்துவத்தின் அடிப்படை மாறவில்லை. அன்றைக்கும் அவனுடைய அடிப்படை இதுதான். இன்றைக்கும் அவனுடைய குறிக்கோள் இதுதான். எவ்வளவுதான் முன்னேறினாலும் உணர்வின் அடிப் படையில் தோன்றும் குறிக்கோள் ஒன்றாகத்தான் இருக்கும். ஆன்மிகவாதி சமுதாயத்தைக் காணுகின்ற காட்சி வேறு, உலகாயவாதி சமுதாயத்தைக் காணு கின்ற காட்சியே வேறு. ஆன்மிகவாதி தனி மனிதனைக் காணுகின்ற காட்சி வேறு; உலகாயதவாதி தனி மனிதனைக் காணுகின்ற காட்சியே வேறு. ஆன்மிகவாதி தனி மனிதனுக்கு ஊறு செய்து