பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் 153 முறையாகக் கற்றாலே அவருடைய மன வளர்ச்சியை நாம் அறிந்துகொள்ள முடியும். இலக்கியத் திறனாய்வாளர்கள் மேலை நாட்டைப் பொறுத்தமட்டில் சொல்லுவார்கள். வேர்ட்ஸ்வொர்த் என்ற ஆங்கிலக் கவிஞன் ப்ரிவேவ் என்ற பகுதியை எழுதியிருக்கிறான். அந்தக் கவிஞனுடைய வளர்ச்சியை அந்த ஒரு பகுதியில் முழுமையாகக் காணமுடிகிறது என்று சொல்லு 6)fs TsT&SGT. அதுபோல அருட்பிரகாச வள்ளலார் என்று சொல்லப்படுகின்ற இராமலிங்க சுவாமிகளுடைய வளர்ச்சியை, தொடக்கத்திலிருந்து இறுதிவரை அறிய வேண்டுமானால், வரலாற்றைப் பாராமலே கூட, முதலாந் திருமுறையிலிருந்து ஆறாம் திருமுறை வரை பார்ப்போமேயானால் அந்த வளர்ச்சியை நன்றாக அறிந்துகொள்ள முடியும். முதல் திருமுறையைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பண்ணேறும் மொழி அடியார் பரவி வாழ்த்தும் பாதமலர் அழகினை பார்க்க வேண்டுமென்று அவர் மனம் விரும்புகிறது. மனித மனத்திற்குள்ள தனிச் சிறப்பு என்ன வென்றால், எவ்வளவு தீவிரமாக ஒன்றைப் பற்றிச் சிந்தித்தாலும், விரைவிலே அதை விட்டு விட்டு மற்றொன்றிலே தாவுகின்ற தன்மைதான் இதன் இயல்பு, மனமெனுமோர் பேய்க் குரங்கே நீதான் என்று சொல்லுவார். - எனவே குரங்குத் தன்மை படைத்த மனம் இருக்கிறதே, அது எப்பேர்ப்பட்ட பெரியவர்களையும் சுழற்றிவிட்டு விடுகின்ற பேராற்றல் உடையது. அந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கை