பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 அ.ச. ஞானசம்பந்தன் வண்மை கேட்டிங்கு வந்தடைந் தேற்றால் வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர் ஐயா! பெருமானே! சுந்தரருக்கு அன்று கச்சூர் ஆலத்தே - உலகம் முழுவதையும் படைத்தவனாகிய நீ, வீடுதோறும் சென்று பிச்சை எடுத்துக் கொண்டு வந்து உணவு தந்தாய். அடியார் குறை அன்று தீர்த்ததினாலே எனக்கும் செய்வாய் என்று அறிந்த காரணத்தினால் உன்திருவடி வந்தடைந்தேன். வாய்திறந் தொரு வார்த்தையும் சொல்லீர் பெருமானே இவ்வளவு வருந்திக் கேட்கின்றவனாகிய எனக்கு அன்போடு ஆதரவு தருகின்ற வகையிலே ஒரு வார்த்தையாவது சொல்லக் கூடாதா?’ என்று வருந்துகிறார். ஒரு வார்த்தையாவது சொல்லக் கூடாதா என்ற இந்த எண்ணம் கூட, காரைக்கால் அம்மை யாருடைய பாடலில் இருந்து வள்ளல் பெருமானார் பெறுகின்றார் என நினைக்க வேண்டியிருக்கிறது. வள்ளல் பெருமானுக்கு ஏறக்குறைய 1300 ஆண்டு களுக்கு முன்னர் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் பேசுகிறார். இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரும் நெறி பணியா ரேனும் 'இந்த வழியில் போ' என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லத் தயங்குகிறாரே - என்ற அதை அப்படியே வள்ளல் பெருமானின் நினைவில் வர இங்கே பேசுகிறார். வண்மை கேட்டிங்கு வந்தடைந் தேற்றால் வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்