பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 அ.ச. ஞானசம்பந்தன் அடுத்த என்றால் பொருத்தமான என்பது பொருள். இதில் சிறப்பு என்னவென்றால் 19-ஆம் நூற்றாண்டில் இந்தத் தமிழகத்தைப் பொறுத்த மட்டிலே உடைக்குச் சிறிது மதிப்புக் கொடுக்கப்பட்ட காலங்கூட ஆகும். ஆடையில்லாதவர்கள் அரைமனிதர்களாகக் கருதப் பட்ட காலத்திலே சென்னையில் இருந்து இவற்றை யெல்லாம் கண்ட வள்ளல்பெருமான் - இப்படி மன வளர்ச்சி கொள்ளுகின்ற காலத்திலே, அணிகொள் கோவணக் கந்தையே நமக்கு அடுத்த ஆடை என உலகத்திற்குச் சொல்வதற்குப் பதிலாக தன் மனத்தையே நோக்கிப் பேசுகிறார். அதற்கு இன்னும் ஒருபடி மேலே சென்று, கணிகொள் மாமணிக் கலன்கள் மேலே சென்று கண்ணுள் மாமணிக் கண்டிகை கண்டாய் மாமணிக்கலன்களை - வைரம் முதலான கற்களி னாலே செய்யப்பட்ட ஆபரணங்களைப் பூண வேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் இவரைப் பொறுத்த மட்டிலே மாமணிக் கலன்கள் எவை தெரியுமா? கடவுள் கண்ணுள் மாமணிக் கண்டிகை நம்முடைய இறைவனுடைய கண்டிகை எனச் சொல்லப்படுகிற ருத்திராட்சம் ஒன்றுதான், அற்புத மான ஆபரணமாகும் என்று பேசுகின்ற முறையிலே இந்த வளர்ச்சியின் அடுத்தபடியை நாம் காண முடிகின்றது. விக்கிரகத்தின் வழிபாட்டில் ஈடுபட்டார். திருநீற்றில் ஈடுபட்டார். ருத்திராக்கத்தில் ஈடுபட்டார். இது ஏதோ வாழ்க்கையிலே காலையிலோ, மாலையிலோ சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று என்ற