பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் 165 அவன் நமக்கு அருள் செய்ய வேண்டுமானால் எந்த அடிப்படையில் செய்கிறான்? நம்முடைய தகுதி நோக்கியா? நிச்சயமாக இல்லை. தகுதி இல்லா விட்டாலும் செய்கின்றானே ஏன் என்றால் 'கனிவோடு என்று சொல்லுவார். அருள் காரணமாக பாவம் பிழைத்துப் போகட்டும் என்ற் வள்ளன்மை காரணமாக அவன் இந்த அருளைச் செய்கின்றான் என்று அற்புதமாக ஒரு மாபெரும் உண்மையை விளக்கிச் செல்கிறார். குருவாக வந்தவன் அருளைச் செய்கின்ற இடம் - அதிலும் ஒரு பேருண்மை புலப்படுகிறது அவருக்கு வந்தவன் சொன்னானாம், அற்றவருக் கற்ற சிவன் வள்ளுவப் பேராசான் சொன்னானே, எல்லாவற்றை யும் விட்டுவிட்டு அவனுடைய திருவடியைப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்று. பற்றுக பற்றற்றான் பற்றினை ஏன் பற்ற வேண்டும்? பற்றுவிடற்கு என்றாலே அந்த அற்புதத்தை காலத்திற்கு ஏற்ற அளவிலே ஓரளவு மாற்றி, - அற்றவருக்கு அற்ற சிவனாம் எனும் பொன்மொழியை என்று தன்னுடைய நெஞ்சையே பார்த்து, குருவாக வந்து இவ்வளவு பெரிய அற்புதத்தை அருளிச் செய்தானே நீ மறந்துவிட்டாயா என்று சொல்வதைப் போல வள்ளல்பெருமான் பேசுவதைக் காண் கின்றோம். இப்படி நெஞ்சறிவுறுத்தலில் w தொடங்கியது மகாதேவி மாலையிலும் அது விரிந்து செல்கிறது.