பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 : அ.ச. ஞானசம்பந்தன் எவ்வளவு குற்றங்களை இந்த உயிர்கள் இழைத்தாலும், அத்தனையையும் பொறுத்துக் கொண்டு அருள் செய்ய வேண்டுமென்ற இன்றியமையாமை என்ன? என்ற ஒரு வினாத் தோன்றுமல்லவா? அதற்கு சைவசித்தாந்தம் மிக அழகான ஒரு விடையைத் தருகிறது. அதை அப்படியே வள்ளல் பெருமான் வாங்கிப் பேசுகிறார். சிவஞான போதத்தின் 8 ஆம் சூத்திரம், ஐம்புல வேடரின் என்று பேசும். இந்த ஆன்மா இறைவனோடு தொடர் புடையது. அதனால் என்றைக்கும் இறைவன் கைவிட மாட்டான். ஆனால் ஆன்மா இப்போது பொறிபுலன் கள் என்று சொல்லப்படுகிற ஐந்து வேடர்கள் கையிலேபட்டு, தான் அரசகுமாரன் என்பதைக் கூட மறந்துவிட்டு இந்த வேடர்களின் நடுவே வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆண்டவனைப் பொறுத்தமட்டிலும், உயிர் கள் தம்முடைய முதல் இடம் எது என்பதை மறந்துவிட்டு வேடர்களை கையிலே அகப்பட்டு வளர்ந்தாலும் மூலவனாக இருக்கின்ற இறைவன் அவர்களை விட்டுவிடுவதில்லை. அன்னியன், இன்னியன் தனக்கும் உயிர்களுக்கும் வேறுபாடில்லை என்ற காரணத்தினால் குருவாக வந்து தவற்றினைத் திருத்தி ஏற்றுக் கொள்கிறான் என்ற அற்புதமான சிவஞானபோதக் கருத்தை வள்ளல்பெருமான் தமக்கே உரிய முறையில் மிக விரிவாகப் பாடுகிறார். கூர்கொண்ட வாள்கொண்டு கொலைகொண்ட வேட்டுவக் குடிகொண்ட சேரிநடுவில் குவைகொண்ட ஒரு செல்வன் அருமைகொண் டின்றிடு குலங்கொண்ட சிறுவன் ஒருவன்