பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் ( 189 என்ற பாடலில் மறவர் குடியில் வந்து என்னை ஆட் கொண்டாய் என்று பேசுவது சிவஞான போத சூத்திரத்திற்கு அப்படியே விரிவுரை செய்தது போல கிடக்கக் காண்கிறது. அப்படியானால் இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை ஓரளவு விளக்கியாயிற்று. அவன் கருணைக் கடல். ஆதலாலே நிச்சயமாக வந்து அருள் புரிந்து நம்மை மீட்டுக் கரையேற்றுவான் என்ற உறுதியும் பெற்றாயிற்று. அப்படியானால் இந்த உறுதிப் பாட்டிலே திளைக்கின்றபோது மனித மனத்திற்குள்ள மற்றொரு இயல்பு அங்கே குறுக்கிடுகிறது. சமயத்தில் ஒருவேளை கைவிட்டுவிட்டால் என்ற எண்ணம் மனித மனத்திற்கு இயல்பாக உண்டு. சாதாரணமாக உலகியல் முறையில் பார்க்கின் றோம். குறிப்பிட்ட இடத்திற்குப் போகின்ற புகை வண்டியெனத் தெரிந்து, அதற்குரிய பயணச் சீட்டு வாங்கி, அதிலே ஏறிக்கொண்ட பிறகு கூட பக்கத்திலே இருக்கிற நாலுபேரைப் பார்த்து, 'ஐயா இது இன்ன ஊருக்குத்தானே போகும்? இன்ன ஊருக்குத்தானே போகும்?' என்று கேட்பதை நம் அன்றாட வாழ்க்கை யில் காணுகிறோம் என்றால், எந்த ஒன்றிலும் உறுதிப் பாடு இல்லாத காரணத்தினாலே இத்தகைய ஐயங்கள் வரத்தான் செய்கின்றன. ஆகவே அப்படி வரும்போது என்ன செய்வது? இறைவனுடைய கருணை நம்மாட்டு இருக்கிறதா, இல்லையா என்ற ஐயம் வந்துவிடுகிறது. அப்போது இறைவனையே பார்த்து இதோ பாரய்யா, உன்னுடைய கருணை என்னிடத்தில் பாயாவிட்டால் குற்றம் என்பேரில் இல்லை. உன்பேரில்தான் என்று சொல்வதுபோல வஞ்சகப் புகழ்ச்சியாகப் பாடுகின்ற