பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 அ.ச. ஞானசம்பந்தன்


இரண்டாம் நரசிம்மன் கைலாசநாதர் கோயிலைக் கட்டினவன். அவன் காலத்தில்தான் சுந்தரர் இருக்கிறார் - காஞ்சீபுரம் போனவர்களுக்குத் தெரியும். நேரே எதிர்த்தாற்போல கைலாசநாதர் கோவில். இன்றைக்கும் அந்தக் கோயில் மிக அழகாக இருக்கிறது என்றால், புதிதாகக் கட்டின காலத்தில் எப்படி இருந்திருக்கும்? இரண்டாம் நரசிம்மன் என்ன பண்ணினான்? கைலாசநாதர் கோவிலுக்குள் நுழையும்போது இரண்டு தூண்கள் இருக்குமே அதிலே கல்வெட்டுப் போட்டான். 'ஏன் இதை நான் கட்டினேன் என்றால் கயிலயங்கிரி வாழ்வு சலிப்பேற்படின் உமாதேவியோடு வந்து கைலாசநாதர் தங்குவதற்காக' - எவ்வளவு திமிர் இருக்கும் ? சிவபெருமானுக்குச் சலிப்பு ஏற்படின் வந்து தங்குவதற்காக இவர் கோவில் கட்டினாராம், அதனால்தான் 'உன் கோயில் வேண்டாமடா என்று பூசலார் கோவிலுக்குப் போய்விட்டார், விஷயம் அவ்வளவுதான்.

அந்தக் கோவில் சுந்தரருக்கு முன்னாலே இருக்கிறது. இந்தக் கோயில் வண்ணப்பூச்சு இன்றைக்கும் போகவில்லையென்றால் அன்றைக்கு எப்படி இருந்திருக்கும்? ஆனால் சுந்தரர் அந்தக் கோவிலுக்கும் போகவில்லை. பாடவில்லை. பெரிய அதிர்ச்சி எனக்கு.

அப்படியானால் பல்லவர்கள் சுந்தரருக்கு விரோதிகளா? அல்லர்.

உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா
மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமான்..

.

என்று பாடுகிறவர்,