பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் 81 வளர்ந்த சமயங்கள், அதாவது கிறிஸ்தவ சமயமும் இஸ்லாமிய சமயமும் மதமாற்றத்தை நம்புகின்றன. உண்மை என்பதனைத் தாங்கள் கண்டதாகவும், தங்க ளுடைய தலைவர்களாக இருக்கின்ற தீர்க்கதரிசிகள் உண்மை இதுதான் என்று அறுதியிட்டுக் கூறி விட்டதாகவும், இந்த உண்மையைத் தவிர வேறு ஒன்றும் உண்மையென உலகில் இருக்க முடியாது என்பதாகவும் நம்புகின்ற காரணத்தால் ஒருவன் நல்ல நிலையை அடையவேண்டுமானால் தாங்கள் பின்பற்றுகின்ற சமயத்தை அவனும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறுகின்றனர். பழைய கன்பூசியனி சம், டோயிசம் ஆகியவை இதனை ஒத்துக்கொள்ளவே இல்லை. உண்மை என்பது பல்வேறு கிளைகளை உடைய ஒரு பொருள். எந்தக் கோணத்தில் நீ நின்று பார்க்கிறாயோ அந்தக் கோணத்திற்கு ஏற்ற ஒளி உனக்குக் கிடைக்கிறது. எதிரில் உள்ள சோதரியார் அணிந்திருப்பது ஒரே வைரக் கம்மல்தான். ஒளி எக் கோணத்தில் பாய்கிறதோ அதற்கேற்றாற்போல் ஒளிவீச்சு ஏற்பட்டு நிறமாலை தோன்றுகிறது. எந்தக் கோணத்தில் நின்று அக்கல்லைக் காணுகின்றோமோ அதற்கேற்றாற்போல் நீலநிறமும், ஆரஞ்சு ஒளியும், சிவப்பு வண்ணமும் தோன்றும். எனவே வைரத்தின் நிறம் நீலம்தான், அல்லது ஆரஞ்சுதான் என்றோ, சிவப்புத்தான் என்றோ கூறிவிட முடியாது. அதுபோல உண்மை என்ற அந்தக் கண்காணாப் பொருள் அவனவன் நிற்கின்ற நிலைமைக்கு ஏற்பக் காட்சி தருகின்றது. பிறர் கூறுவது உண்மை இல்லை, நான் கூறும் ஒன்றே உண்மை, எனவே அவரை விட்டு விட்டு