132
மனத்தின் தோற்றம்
திருமாலின் கருடனுக்கு அஞ்சாத பாம்பு, முருகனின் மயிலுக்கு அஞ்சும் போலும், ஒரு தலைவனிடம் இருப்பவர்கள் அத்தலைவனின் பிள்ளைக்கு மட்டுமன்று - அப்பிள்ளையின் நாய்க் குட்டிக்கும் அஞ்சுவது போன்றது இது.
இது வெங் கற்பனை நயச்சுவை. அவ்வளவுதான்.
3. சிறப்புச் செய்திகள்
3-1 வெண்மைப் புகழ்
கண்ணுக்குத் தெரியாத பண்பாகிய புகழ் என்பதை வெண்ணிறமாகக் கூறுதல் இலக்கிய மரபு. இகழ் கரு நிற மாம் - புகழ் வெண்ணிறமாம். கம்பர் பல இடங்களில் இதைக் கூறியுள்ளார். இலங்கையை இருள் கவ்விக் கொண்டதாம். இதற்குக் கம்பர் கூறும் உவமைகளுள் ஒன்று வருமாறு:-
இராவணன் சீதையைச் சிறையிட்டதால் அவனுக்கு உண்டான கரிய இகழ் சூழ்ந்து கொண்டதுபோல் இருள் சூழ்ந்து கொண்டதாம். இராவணனது இகழை, வெண்மை நீங்கிய புகழ்' என்கிறார் கம்பர். புகழ் வெண்மையானது. அந்த வெண்மை நீங்கியது இகழாகத்தானே இருக்க வேண்டும். அதனால் இகழை வெண்மை நீங்கிய புகழ் என்கிறார். பாடல்:
- “வண்மை நீங்கா நெடுமரபில் வந்தவன்
- பெண்மை நீங்காத கற்புடைய பேதையைத்
- திண்மை நீங்காத வன்சிறை வைத்தான் எனும்
- வெண்மை நீங்கிய புகழ் விரிந்த தென்னவே” (5-2-44)
என்பது பாடல். இவ்வாறு, புகழ் வெண்மையானது என்பதைச் சிவப்பிரகாசர் தெளிவாக் கூறியுள்ளார். கைலை மலை வெண்மையானது. சிவனது புகழாகிய வெண்மை தான் வெள்ளைக் கைலை மலையாகத் திரண்டுள்ளது எனக் கற்பனை செய்துள்ளார், பாடல்: