இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
148
மனத்தின் தோற்றம்
மரம் தீப்பற்றிக் கொண்டது என அஞ்சி மேலேயே வட்ட மிட்டு வருந்தினவாம். பாடல்:
- “செங்கதிரவன் எழுந்த திவாவிடைக் குடம்பை தெற்றிப்
- பொங்குஒளி மரத்தில் சீர்சால் புள்ளினம் பொறையுயிர்த்துக்
- கங்குலின் அடைகிடப்பக் கருதிவந்து அதனைக் கண்டு
- வெங்கனல் கொளுந்திற்றுஎன்று மீமிசைச் சுழன்று இரங்கும்” (19-19)
என்பது பாடல். திவா = பகல்; குடம்பை = கூடு; பொறை உயிர்த்தல் = முட்டையிடுதல், ஒளிமரத்திற்குச் சோதி மரம் என்ற பெயரும் உண்டு. இம்மரம் இரவில் ஒளி வடிவாகத் தெரியுமாம்.
5.4 திங்களின் கொடுமை
திங்கள் (நிலா) தோன்றி, தன்னைப் பெற்ற தாய் அலை மோதித் தலைசாயும் படிச் செய்கிறதாம். தன்னுடன் பிறந்தவளின் வீட்டை மூடிப் பூட்டிவிடுகிறதாம். இவ்வாறு தாய்க்கும் தமக்கைக்குமே கேடு செய்யும் திங்கள், உறவு இல்லாத அயலாரை என்ன பாடு படுத்துமோ?
இவ்வாறு, அல்லமப் பிரபுவைக் காதலித்துக் காம வேதனை கொண்டுள்ள மாயை என்பவள் திங்களைத் திட்டுகிறாள்: பாடல்:
- “தாய்வா யடைந்து மிருந்தலையை
- மோதிமோதிச் சலித்தலறக்
- காய்வாய் கிலவே உடன்பிறந்தாள்
- இருந்து வாழும் கடிமனையை
- நீ வான் எழுந்து வந்தழிப்பா
- யென்றால் அந்தோ நிலையின்றித்
- தேய்வாய் கின்னோடு இயைபில்லா
- என்னை என்ன செய்யாயோ” (5.57)
- “தாய்வா யடைந்து மிருந்தலையை