உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

201



மெய் ஈறு இன்மை

மற்றும் கன்னடத்தில் மெய் ஈற்றுச் சொற்கள் இல்லை . அதாவது - எச்சொல்லின் இறுதியிலும் எந்த மெய் யெழுத்தும் இராது. இஃதும், தமிழோடு தொடர்புடைய ஒரு கூறாகும். தமிழ் மெய்யெழுத்துகளுள் ஞ், ண், ம், ய், ர், ல், ழ், ள், ன் என்பன சொல் இறுதியில் பெருவாரியாக வரும். இவற்றுள், பேச்சு வழக்கில் உரிஞ் = உரிது, உண்= உண்ணு. தூண்=துணு எனவும், நாய் - நாயி. தாய் =தாயி எனவும், வேர்-வேரு, பார்: பாரு எனவும், கால்=காலு, பல்=பல்லு எனவும், கூழ் = கூழு, அகழ்=அகழு எனவும், முள் = முள்ளு, தேள் =தேளு எனவும், தின் = தின்னு, பேன் = பேனு எனவும், ம் தவிர்த்த மற்ற மெய்கள் உகரச் சாரியையோ இகரச் சாரியையோ பெற்று வரும். மரம், ஏலம், அவன், போனான் என ம், ன் என்னும் மெய்யீற்றுச் சொற்கள் தமிழில் 'உ' சாரியை பெறுவதில்லை; சில இடங்களில் மட்டும் ன் ஈறும் உகரச் சாரியை பெறுவ தில்லை. பலம் - பலமு, குடம்= குடமு எனத் தெலுங்கில் ‘ம் உகரச் சாரியை பெறுகிறது. தமிழிலோ, மரம், ஏலம், அவன், போனான் போன்ற சொற்களின் இறுதி மெய் யெழுத்துகள் முழுமையாக ஒலிக்கப்படுவதில்லை; மர(ம்), ஏல(ம்), அவ(ன்), போனா(ன்) என இறுதி மெய் ஒலித்ததும் ஒலிக்காததுமாகப் பாதியளவு ஒலியே பெறுகின்றன. பிரெஞ்சு மொழியிலும் இது போன்ற அமைப்பு உண்டு. ஒன்று என்னும் பொருள் உடைய UN என்னும் பிரஞ்சுச் சொல் ஆன் என முழுதும் ஒலிக்கப் படாமல் ஆ(ன்). என மெலுக்காகவே ஒலிக்கப் பெறுகிறது. விரிவஞ்சி ஒர் எடுத்துக்காட்டோடு விட்டு விடலாம்.

இதுகாறும் கூறியதிலிருந்து தெரிவதாவது: தமிழிலும் பேச்சு வழக்கில் சொல் இறுதி மெய்யெழுத்துகள் சரியான - போதுமான ஒலி பெறுவதில்லை - என்பதாம். கன்னட