பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
204
மனத்தின் தோற்றம்
 


என்னும் திருக்குறள் பா அறிவிக்கிறது. கல்வியே செல்வம், மற்றையவை மாடு (செல்வம்) ஆகா - என்பது பொருள். தன் சொல்லுக்குத் தானே பொருள் கூறும் பாடல் இது.

ஐயர் குலத்தினர், தம் வீட்டிற்கு வரும் மருமகளை ‘மாட்டுப் பெண்’ என்று கூறும் வழக்காறும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. மாடு என்பதற்குப் பக்கம் என்னும் பொருளும் உண்டு வீட்டில் பிறந்த பெண் வேறு வீட்டுக்குப் போய் விடுவதாலும் மருமகள் தம் பக்கத்திலேயே இருப்ப தாலும் மாமியார் வீட்டார் மருமகளை ‘மாட்டுப் பெண்’ என்று அழைப்பதாகச் சிலர் பொருள் கூறுகின்றனர். இது சரியன்று. மருமகளை வீட்டிற்கு வந்த திருமகள் (இலட்சுமி) என்று சொல்வது மரபு. மருமகள் வீட்டிற்குச் செல்வம் ஆவாள். மேலும் சீர்வரிசைச் செல்வம் (சீதனம்) கொண்டு வருகிறாள். இதற்கேற்ப, மாடு என்பதற்குச் சீதனம் (பெண் சீர்) என்னும் பொருளும் உண்டு என அகராதி நிகண்டு கூறுகிறது. எனவே, மாட்டுப் பெண் என்றால், செல்வப் பெண் என்றே பொருள் கூமல் வேண்டும். ஐயர்கள் ஆத்திலே (அகத்திலே), அம்மாஞ்சி (அம்மான் சேய்) என்றெல்லாம் நல்ல தமிழ்ப் பெயர்களை வழங்குவதை அறியலாம். அவற்றுள் மாடு என்பதும் ஒன்றாகும்.

இலத்தீன் மொழியில், Pecunia, என்னும் சொல்லுக்கு மாடு, செல்வம் என்னும் இரு பொருள் உள்ளமையும் இங்கே ஒப்பு நோக்கத் தக்கது. இதுகாறும் இது பற்றிக் கூறியதிலிருந்து இன்னும் ஓர் உண்மையை அறிய முடிகிறது. அஃதாவது:-

இப்போது உள்ளதுபோல் பண்டைக்காலத்தில் உலோக நாணயமோ அல்லது தாள் நாணயமோ (Currency) இல்லை. ஒரு பொருள் இந்து மற்றொரு பொருள் வாங்கும்