உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

207



(எங்கு) - பொங்கக (பொங்குக) என ந எழுத்தும் பயன் படுத்தப்பட்டிருப்பது இனிமை பயக்கிறது. ‘ங்’ என்னும் ஒற்றுக்குப் பக்கத்தில் ககரம் வந்த சொற்கள் சிலவற்றில் ககரம் வகரமாகியுள்ளது. ஆனால், செங்கல், தரங்கம், தெங்கு முதலிய சொற்களில் இவ்வாறு ககரம் வகர மாக வில்லை.

வான் விகுதி

தமிழில், செய்வான் வந்தான், படிப்பான் சென்றான் - என்னும் தொடர்களில் உள்ள செய்வான்’ என்பதற்குச் செய்ய என்பது பொருள், 'படிப்பான்’ என்பதற்குப் "படிக்க' என்பது பொருள். வான், பான் என்பன வினை யெச்ச விகுதிகள் எனத் தமிழ் இலக்கணம் கூறுகிறது. இவை போல, மலையாளத்தில் ஆன், வான் என்பன வினை யெச்ச விகுதிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மலை யாளத்தில், தின்னான் - குடிக்கான், வாங்விக்கான், காணு வான் - என்பனவற்றிற்கு முறையே, தின்ன - குடிக்க-வாங்க, காண - என்பன பொருளாம். இந்த அமைப்பும் இந்த இரு மொழிகட்கும் உள்ள நெருக்கத்தை அறிவிக்கிறது.

வேண்ட

வேண்டிய தில்லை என்னும் பொருளில் 'வேண்டாம்' என்னும் சொல் தமிழில் பேச்சு வழக்கில் உள்ளது. ஆனால், தமிழில் எழுத்து வழக்கில் 'வேண்டா' என்றே சொல்ல வேண்டும்; இறுதியில் 'ம்' கூடாது. மலையாளத்தில் 'வேண்டா' என்பது 'வேண்ட' என வழங்கப்படுகிறது; இங்கும் இறுதியில் 'ம்' இல்லை. ஆனால், இறுதியில் 'ஆ' என்பது 'அ' என ஆகியுள்ளது, இந்தச் சிறு மாறுதலைத் தவிர, 'வேண்ட' என்னும் மலையாளம் 'வேண்டா' என்னும் தமிழோடு ஒத்திருப்பதைக் காணலாம்.