இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுந்தர சண்முகனார்
219
- “சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
- தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியிரே
- நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
- நறுஞ்சினை வேங்கை கன்னிழல் கீழ்ஒர்
- தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே
- தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்
- கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
- குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
- பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை கிறுமின்
- பரவலும் பரவுமின் விரவுமலர் துவுமின்
- ஒருமுலை இழந்த நங்கைக்குப்
- பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே”
குன்றவரின் இயங்களும் பூசனை முறைகளும், இப் பகுதியில், அடிமேல் அடித்தாற்போல் தொடர்ந்து இடம் பெற்றுப் படிப்பவரை மகிழ்விக்கின்றன.
இது நகையாகின்றே
தலைமகன் ஒருவனோடு காதல் கொண்ட தலைமகள் ஒருத்தி விரைவில் மனம் கூடாமையால் மிகவும் வாடி வதங்கி மெலிந்து காணப்படுகிறாள். இந்தக் காதல் திருவிளையாடலை அறியாத தலைவியின் தாய், தன் பெண்ணை ஏதோ தெய்வம் தீண்டி அச்சுறுத்தி விட்டது என்று எண்ணி, வேலன் வெறியாடல் செய்யத் தொடங்கு கிறாள். அத்தெய்வம் முருகன் என எண்ணுகிறாள்.
தாய் முருகனுக்குப் பூசனை போடுவாள்; முருகன் ஏறிய வேலன் என்னும் சாமியாடியை அழைத்து, மகளின் நோய்க் காரணத்தை அறிந்து சொல்லச் செய்து அது தீர்க்கும் வழியையும் அறிவிக்கச் செய்வாள் தாய். வேலன் என்பவன் மேல் முருகன் ஏறி எல்லாம் கூறுவானாம். இதற்குத் தமிழ்