இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44
மனத்தின் தோற்றம்
மட்டும் தண்ணீரின் மேல்மட்டத்திற்கு நீட்டி ஆண்பூவோடு தொடர்பு கொள்வதையும் காணலாம்.
எனவே, மக்கள் மட்டுமே மனையறம் ஒம்பிப் பிறர்க்கும் பயன்படுகிறார்கள் என்று எண்ணுவதற்கில்லை; அல் றிணையாகிய மரஞ் செடி கொடிகளின் மலர்களுங்கூட மனையறம் நடத்திப் பல்வகை உயிர்கட்கும் பயன் தருகின்றன என்பது புலனாகும். இதனைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தமது மனோன்மணியம் என்னும் நாடகக் காவியத்தில் மிக அழகாகச் சொல்லோவியப்படுத்தியுள்ளார். அவர் கூற்றுப்படி:- ஒரு சிறு புல் உட்பட எல்லா உயிர்களுமே குறிக்கோளுடன் வாழ்கின்றன. எனவே