உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

மனத்தின் தோற்றம்



இன்னும் சிறிது தொலைவில் இருந்த நிலையில், இடையிலே யிருந்த கெடிலத்தில் வெள்ளம் சீறிப் பெருக்கெடுத்தோடிய தாம். என்செய்வார் மாணிக்கவாசகர் ஆற்றில் வெள்ளம் தணிவது எப்போது? வெள்ளத்தின் அளவும் விரைவும் மிகக் கடுமையாயிருந்ததால் தெப்பமும் விடப்பட வில்லை. ஆற்றைக் கடந்து அக்கரையை அடைந்தால் அல்லவா திருப் பாதிரிப்புலியூர்த் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடமுடியும்? மூன்று நாள்கள் இரவு பகல் பட்டினியுடன் அங்கேயே கிடந்தாராம். அப்போது இறைவன் மாணிக்கவாசகர் மேல் இரக்கங்கொண்டு ஒரு சித்தராய்த் திருவுருவந் தாங்கி அவ்விடத்தில் தோன்றி உமக்கு என்ன வேண்டும்? என்று அவரைக் கேட்டாராம். நான் ஆற்றைக் கடந்து அப்பால் சென்று திருப்பாதிரிப்புலியூர்த் தேவனை வழிபடவேண்டும்; அதற்கு ஏற்பாடு செய்தருளுக’ என்று வேண்டிக் கொண்டாராம். உடனே சித்தர் ஆற்றை நோக்கி, 'ஏ கெடிலமே! நீ வளைந்து திசைமாறித் திருப்பாதிரிப் புலியூருக்கு அப்புறமாகச் சென்று மாணிக்கவாசகருக்கு வழி விடுக’ என்று கைப் பிரம்பைக் காட்டி ஏவினாராம். நகருக்குத் தெற்கே ஒடிய கெடிலம் சித்தர் கட்டளைப்படி திசைமாறி நகருக்கு வடக்கே ஒடி வழி விட்டதாம். பின்னர் மாணிக்கவாசகர் இடையூறின்றித் திருப்பாதிரிப்புலியூர் போந்து சிவனை வழிபட்டாராம்” இச்செய்தியினை, திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம்-பாடலேசர் சித்தராய் விளையாடிய சருக்கத்திலுள்ள-பின்வரும் பாடல்களால் அறியலாம்.

[குறிப்பு 1]“அருவமா யுருவமா யருவுரு வகன்ற
உருவமாகிய பரவெளி பெரும்பற்றப் புலியூர்த்
  1. 32. பெரும் பற்றப் புலியூர்-சிதம்பரம், உத்தர புலிசை திருப்பாதிரிப்புலியூர். 35. உத்தர தீரம் . வடகரை. 39. சாகரம் - கடல்.