உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

7



(Sensory Nerves) என்றுங்கூடப் பெயர் வழங்கப்பெறும்: வெளிச்செல்லும் நரம்புகள் (Efferent Nerves) மூளையிலிருந்து உறுப்புகளுக்குக் கட்டளையை எடுத்துச் செல்வதால் கட்டளை நரம்புகள்’ (Connecting Nerves) என்றுங்கூடப் பெயர் வழங்கப்பெறும்.

இங்கே, ஐம் பொறிகளுள் மெய் என்னும் ஒரு பொறியின் ஊறு என்னும் புலன் தொடர்பான தூண்டல் - துலங்கலை அறிந்தோம். இதே போன்று, வாய், கண், மூக்கு, செவி என்னும் மற்ற நான்கு பொறிகள் (சுவை, ஒளி நாற்றம், ஓசை என்னும் புலன்கள்) தொடர்பாகவும் தூண்டலுக்குத் துலங்கல் (Response to Stimulus) உண்டு. எடுத்துக்காட்டுகளாவன:- உணவுப் பொருள் துண்டல் - அதனை வாங்குதலும் வாய்க்குக் கொண்டு செல்லுதலும் நாக்கு சுவைத்து உண்ணுதலும் போன்றவை துலங்கல்; எதிரே உள்ள ஒரு பொருள் தூண்டல் - கண் உற்றுப் பார்த்து அதற்கேற்பச் செயல் புரிதல் துலங்கல்; மலர் தூண்டல் - முக்கால் மணம் அறிந்து பறித்தலும் வாங்குதலும் சூடுதலும் மோந்து பார்த்தலும் போன்றவை துலங்கல்; மணியோசை தூண்டல் - அதனைக் காதால் கேட்டு அதற்கேற்ப வேலை தொடங்குதலும் செய்தலும் போன்றவை துலங்கல். இவ்வாறு வெவ்வேறு எடுத்துக்காட்டுகள் பல தரலாம்; மழை பெய்தால் குடை பிடிக்கிறோம்; இங்கே மழை தூண்டல் - குடை பிடித்தல், விரைந்து நடத்தல் போன்றவை துலங்கல். இவ்வாறு எல்லாச் செயல்களிலும் தூண்டல் - துலங்கல் இருப்பதைக் காணலாம்.

உள்செல் நரம்புகள் (Afferent Nerves) உறுப்புகளி லிருந்து மூளைக்குச் செய்தி எடுத்துச் செல்வதாகவும், வெளிச்செல் நரம்புகள் (Efferent Nerves) மூளையிலிருந்து கட்டளைகளை உறுப்புகளுக்குக் கொண்டு செல்வதாகவும்