பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறை மனம் இரண்டடுக்கு மாடி வீடு ஒன்று. தரை மட்டத்தி லிருக்கிறது ஒரடுக்கு. மற்ருென்று தரை மட்டத்திற் குக் கீழே பூமிக்குள் மறைந்திருக்கிறது. மேலேயுள்ள மாடியில் வசிப்பவர்கள் பொதுவாகப் பண்புள்ள பொறுக்கி எடுத்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். கீழ்ப் பகுதியிலே கூட்டம் அதிகம். அதிலுள்ளவர் அனைவரும் காட்டுமிராண்டிகள்; சுயநலக்காரர்கள்; தங்கள் சுகமே பெரிதென மதிப்பவர்கள்; பிறரைப் பற்றிய கவலையே இல்லாதவர்கள்; மானம் மரியாதை என்ற பேச்செல் லாம் அவர்களுக்குப் பொருளற்றது. ஆளுல் அவர்கள் வலிமைக்கும் வேகத்திற்கும் பேர் போனவர்கள்: அவர்கள் திடீரென்று மேல்மாடிக்குள் நுழைந்து ஆதிக்கம் செலுத்த முயல்வார்கள். இப்படிப்பட்ட ஒரு வீட்டைப் போலத்தான் நமது மனம் இருக்கிறதென்று சிக்மண்ட் பிராய்டு போன்ற உளவியலறிஞர்கள் கருதுகிரு.ர்கள். மனத்தின் ஒரு பெரும் பகுதி மறைந்திருக்கிறதாம். அதில் பதுங்கிக் கொண்டிருக்கிற ஆசைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் திடீரென்று மேலே கிளம்பி ஆர்ப்பாட்டம் செய்யு மாம். இவைகளெல்லாம் கட்டுக்கடங்காமல் மேல் வருவதைத் தடுப்பதற்குப் பாராக்காரனைப்போல் ஒரு சக்தி இருக்கிறதாம். மேலே சொன்னவாறு மறைந்திருக்கும் மனப் பகுதியைத் தான் மறை மனம், நனவிலி மனம் (Unconscious Mind) srer stayrissir. Lo sop lo sorð