பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மனமும் அதன் விளக்கமும் கூடத் துன்பந் தந்தவை கொஞ்சம் விரைவிலே மறந்து போகின்றன. இன்ப நினைவுகள் நன்கு மனத்திலே பதிந்து நிற்கின்றன. துன்பந் தந்தவை நினைவிருந் தாலும் அவை இப்பொழுது கூர்மை மழுங்கி யிருக் கின்றன; அவற்றின் வேகம் வரவரக் குறைந்து போகின்றது. இளமைப் பருவத்திலே தான் படித்த பள்ளிக் கூடம், கல்லூரி ஆகியவற்றை ஒருவன் பெருமை யோடும் மகிழ்ச்சியோடும் சென்று பார்த்து வரு கின்றன். அங்குப் பெற்ற இன்ப அனுபவங்களெல்லாம் அப்பொழுது நினைவுக்கு வருகின்றன. அங்குப் பட்ட துன்பங்களெல்லாம் மறந்து போய்விடுகின்றன. நினை விற்கு வந்தாலும், "அப்பா, அந்தக் கணக்கு வாத்தி யாரா! ரொம்பப் பொல்லாதவர். சரியான அடி கொடுப்பார். இருந்தாலும் நல்லவர். அவர் அப்படி யெல்லாம் சொல்லிக் கொடுக்காமலிருந்தால் எனக்குக் கணக்கே வந்திருக்காது' என்றுதான் பொதுவாகச் சொல்லத் தோன்றும். சிலபேருக்கு நினைவாற்றல் மிக அதிகமாக இருக் கும். ஒரு தடவை கேட்டதை அப்படியே திருப்பிக் கூறக்கூடியவர்கள் உண்டு. ஏகசந்தக் கிராகிகள் என்போர் ஒருமுறை சொல்வதை அப்படியே திருப்பிக் கூறிவிடுவார்களாம். மாம்பழ்க் கவிச்சிங்க நாவல ருக்கு வைசூரி கண்டு இளமையிலே கண் குருடாகி விட்டது; ஆனல் அவருடைய நினைவு ஆற்றல் மிகவும் வியக்கத்தக்கது. ஒரு நூல் முழுவதையும் யாராவது ஒருமுறை படித்துக் காட்டினல் உடனே அவர் அதைத் திருப்பிக் கூறிவிடுவாராம். சிலருக்கு நினைவு ஆற்றல் மிகக் குறைவாக இருக்கும். வெகு விரைவிலே மறந்துவிடுவார்கள்.