பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவு 39 முடியும். எல்லாராலும் அவ்வாறு அறிந்துகொள்ள முடியும் என்று நான் கூறவில்லை. அதற்கு உளவியல் அறிவு நிறைய வேண்டும்; அனுபவமும் வேண்டும். எந்த நிலைமையை உண்டாக்கினல், அதன் விளைவாக எழும் எண்ணங்களைக் கொண்டு மனநிலையைக் காண முடியும் என்பது அனுபவம் வாய்ந்த ஒருவனுக்குத் தெரியும். வெளிப்படையாக எதையும் ஒளிக்காமல் பேசுவதும் கனவும் ஒன்றுக்கொன்று உதவியாக நின்று ஒருவனுடைய மனநிலையை வெளிப்படுத்துகின்றன. சொல்லுவதில் சிலவற்றை மறைத்திருந்தாலும் கனவு அதைக் குறிப்பாகக் காட்டிவிடும். சிக்கலில்லாத எளிய பல கனவுகள் இருக்கின்றன. அவற்றின் குறிப்பைக் கண்டுகொள்ள அனைவராலும் பெரும்பாலும் முடியும். நனவில் நிறைவேருத பல ஆசைகள் கனவிலே நிறைவேறுவதுண்டு. காதல் வயப்பட்ட இளைஞன் தன் காதலியோடு கூடியிருப்பதாகக் கனவு காண் கிருன். வறுமையால் வாடியிருப்பவன் கனவிலே குபேரனைப்போல வாழ்கிருன், அழகான பொம்மை வேண்டுமென விரும்பிய குழந்தை அதைப் பெற்று மகிழ்வதாகக் கனவு காண்கிறது. வீட்டிலே குற்றேவல் புரிவதற்காக ஒன்பது வயதுப் பெண் ஒருத்தி இருந்தாள். அவள் ஒரு நாள் இரவில் எழுந்து உட்கார்ந்துகொண்டு, 'என் அக்காள் வந்து வெளியே நிற்கிருள்: கதவைத் திறந்துவிடுங்கள்: என்று கூறினுள். ஆனல் உண்மையில் யாரும் வர வில்லை. அவள் கண்டது கனவு. தன் அக்கா8ளப் பிரிந்து வந்து பல நாட்களாகி விட்டபடியால் அவளைப்