பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மனமும் அதன் விளக்கமும் டாலும் மின்னலைக் கண்டாலும் உண்டாகின்ற அச்சந்தான், விந்தையாக இருக்கிறது. இருட்டிலே தற்காப்புணர்ச்சியினல் ஒரளவு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டாக வேண்டுமே ஒழிய, பேரச்சம் ஏற்பட வேண்டியதில்லை. இருட்டிலே சாதாரணமாகப் பலர் நடமாடுகின்ருர் கள். அதனல் தீங்கு ஏற்படுவதில்லை. அவ்வாறு சாதாரணமாக அச்சமடைய வேண்டாதவற்றைக் கண்டு காரணமின்றி ஏற்படும் பேரச்சத்தை ஒரு வகையான கிலி (Phobia) என்று உளவியலறிஞர்கள் கூறுகிரு.ர்கள். பல ஆண்டுகளுக்கு முன் , சிறு வயதில் ஏற்பட்ட ஆழ்ந்த உள்ளக் கிளர்ச்சிதான் இதுபோன்ற கிலிக்குக் காரணமாக இருக்கிறது. அம் மனக்கிளர்ச்சியும், அது எதல்ை உண்டானதென்பதும் மறந்து போய்விடும். ஆனல், அதன் விளைவாகத் தோன்றிய கிலிமட்டும் நிலைத்திருக்கும். என்னுடன் கல்லூரியில் படித்த ஒரு மாணவன் காற்று சற்று வேகமாக அடித்தால் கிலியடைவான். அதற்குக் காரணம் அவன் சிறுவனுக இருந்தபொழுது தனது சொந்த ஊராகிய நெல்லூரில் வீசிய பெரும் புயலையும் அதன் காரணமாக விளைந்த உயிர்ச் சேதத்தையும் கண்டு அஞ்சியதே என்று பி ன் ன ல் தெரிந்துகொண்டேன். இதுபோலவே ஒவ்வொரு வகையான கிலிக்கும் ஏதாவது காரணமிருக் கும். இயல்பாக எழுகின்ற ஆசைகள் நிறைவேருமல் போவதாலும், அடிப்படையான உள்ளக் கிளர்ச்சி களிலே தடுமாற்ற மேற்படுவதாலும் கிலி பிறப்ப துண்டு, என்னிடம் படித்த மாணவன் ஒருவனுக்குச் சுமார் 12 வயதிருக்கும். அவன் இருட்டறைக்குள் செல்லவே