பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளக் கிளர்ச்சி 75 களுக்குத்தான் மறிவினைகள் என்று பெயர். தும்முதல், குறட்டை விடுதல் போன்ற செயல்களெல்லாம் மறிவினைகளே. இயல்பூக்கத்தாலும், உள்ளக் கிளர்ச்சியாலும் மனிதன் பல செயல்களில் ஈடுபடுகின்ருன். அறிவைக் கொண்டு எண்ணித் துணிந்து பல செயல்கள் புரிகின் முன். பழக்கத்தின் வலிமையால் சில செயல்களைச் சிந்தனையின் துண்டுதலில்லாது இயல்பாகவே செய்ய வும் கற்றுக்கொள்ளுகிருன். "காலையில் படுக்கையி லிருந்து எழுந்தது முதல் இரவில் படுக்கப் போகும் வரை செய்யும் பல செயல்கள் பழக்கத்தின் பயனுக இயல்பாகவே நடைபெறுகின்றன. உண்பது, ஆடை அணிவது, நண்பர்களை வரவேற்றுப் பேசுவதுஎல்லாம் பல நாட்களில் ஏற்பட்ட பழக்கத்தினல் மனத்தின் தூண்டுதலில்லாமல் ஒழுங்காக அமை கின்றன” என்று வில்லியம் ஜேம்ஸ் என்ற உளவிய லறிஞர் கூறுகிரு.ர். பழக்கத்தினல் செய்யும் வினைக்கும் மறிவினைக்கும் வேறுபாடு உண்டு. பழக்கத்தினல் செய்யும் வினையை முதலில் தொடங்கும்போது மனத்தின் தூண்டுதலால் அதன் துணிவுப்படி செய்தோம். பிறகு பல தடவை அவ்வாறே எண்ணிச் செய்ததால் அது இயல்பான பழக்கமாக நாளடைவில் ஆகிவிடுகிறது. அந்த நிலை யில் மனத்தின் தூண்டுதல் தேவையில்லையென்றே கூறலாம். இவ்வாறு பல எளிய செயல்களைப் பழக்கத் திற்குக் கொண்டு வந்துவிடுவதால் மனத்திற்கு வேறு உயர்ந்த செயல்களைப்பற்றி எண்ணித் துணிய ஒழிவும் ஆற்றலும் கிடைக்கும். பழக்கத்தின் வலிமையாலே இயல்பாகவே பல செயல்களைச் செய்துவிடலாம் என்பதல்ை பழக்கத்தை