பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன நலம் 97 கொள்வதிலும் பகற்கனவின் மூலம் மனநிறைவு காண் பதிலும் ஒருவன் தன் ஆற்றலை விரயம் செய்வாளுல்ை அது தனக்குத் தானே கேடு விளைவித்துக்கொள்வதாக முடியும். இறுதியில் மனநலம் குலைவதற்கும் அவை களே வழிகளாக ஏற்பட்டுவிடும். மன உறுதியோடு தன் வாழ்க்கை விவகாரங்களை எண்ணிப் பார்த்துத் திட்டமான முடிவு கண்டு அம் முடிவின்படி செயலாற்ற அலன் முற்பட வேண்டும். அப்படி முற்படும்போதும் பல இடையூறுகளும், இடையிடையே சிறுதோல்விகளும் ஏற்படலாம். இவற்றை எதிர்பார்த்தே ஒருவன் செய லில் இறங்க வேண்டும். இந்த முயற்சியில்தான் நகைச் சுவை ஒருவனுக்குப் பெரிதும் உதவுகின்றது. அத்துடன் அவன் சில நாட்களுக்கு வேறு இடங்களுக்குச் சென்று ஒய்வு பெறுவதும் மனநலத்திற்கு உகந்ததாகும். நண்பர்கள், அ க் க ம் ப. க் க த் தா ர் கள் முதலியவர் களுடைய வாழ்க்கையில் ஒருவனுக்கு அக்கறை இருக்கு மாஞ்ல் அவர்கள் வாழ்விலும் மனநிறைவு தராத தொல்லைகள் இருப்பதை உணருவான். அந்த உணர்ச்சி யும் அவனுக்கு வாழ்க்கையைப்பற்றிய சரியான மனப் பாங்கை உண்டாக்கும். பற்றற்ற நிலையைக் கடைபிடித்து ஒருவன் தனது கடமைகளைச் செய்வானல்ை அவனுடைய மனம் எந்த விதமான எதிர்ப்பாலும், இடையூருலும், தோல்வி யாலும் துன்பப்படாது என்று நமது நாட்டுச் சான் ருேர்கள் கூறியுள்ளார்கள். இவ்வாருன ஒரு பற்றற்ற நிலை எளிதில் கைகூடாது என்ருலும் அதை அடை வதற்கு என்றும் முயற்சி செய்வது நல்லது. சமயப் பற்றுடையவர்கள் தமது சம யக் கொள்கைக்கு ஏற்ற வாறு இறைவனிடம் தமது வாழ்க்கையையே ஒப் படைத்துவிட்டு, 'நன்றே செய்வாய் பிழை செய்வாய்;